296 தமிழ் பயிற்றும் முறை
இம்முறைகளில் எல்லாம் வெற்றிகாண வேண்டுமால்ை பலருடைய கூட்டுறவும் ஒத்துழைப்பும் வேண்டும். முதலில் எல்லா ஆசிரியர்களும் இதில் ஓரளவு திறமையும் நாட்டமும் கொண்டிருப்பதுடன், உற்சாகத்துடன் ஒத்துழைக்கவும் வேண்டும்; பள்ளிகளைக் கண்காணிப்போர் செலவுகளைப் பாராமல் தாராளமாக நிதியை நல்கி எல்லாவசதிகளையும் ஏற்படுத்தித் தருதல்வேண்டும். அர. சாங்கமும் இத்துறைகளில் நேரிடும் செலவினங்களை ஏற்றுக் கொண்டு தாராளமாக மானியம் வழங்குதல்வேண்டும் ; செல்வர்கள் இதற்கு நன்கொடைகள் அளிக்க முன்வருதல் வேண்டும்.
4. படிப்பில் வேகம்
வாய்க்குட் படிப்பில் கருத்துணரும் ஆற்றலுடன் வேகமாகப் படிக்கும் பழக்கமும் கைவரப் பெறுதல் இன்றியமையாதது. படிக்கும் பகுதிகளில் வேகத்தைத் தடைப்படுத்தக்கூடிய கூறுகளே நீக்கி, வேகத்தை வளர்க் கும் முறைகளையும் கையாள வேண்டும். படிப்பு மெல்லச் செல்லுவதற்குப் பல காரணங்கள் உள. ஒரு சிலவற்றை முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். தடையாக இருப்பவற்றைக் களேந்தால் விரைவு தானுக ஏற்படும். ஒரு சிலர், படிப்பில் விரைவை உண்டாக்கினுல் கருத்துணர்தல் தடைப்படும் என்று கருதுகின்றனர். அது தவருன கருத்தாகும்.
படிப்பின் வேகம் படிக்கும் பொருளுக்கேற்றவாறும் தேவைக்கேற்றவாறும் மாறுபடும். இவற்றைத் தெரிந்தால் வேகத்தின் அளவினை ஒரளவு அறுதியிடலாம். எல்லாவிதப் புத்தகங்களேயும் ஒரே வேகத்துடன் படிக்கவேண்டும் என்ற தவருண எண்ணம் மாறவேண்டும். ஒரே அளவுள்ள ஒரு கதையையும் ஒர் அறிவியற் கட்டுரையையும் படித்துப் பார்த்தால், இரண்டையும் படித்து முடிக்க ஆகும் காலத்தில் வேறுபாடு இருப்பதை அறியலாம் ; அறிவியற்