பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 7.

யில் முதன்முதலாக வழிகோலிய பாரதியின் அடிச்சுவட்டில் பல கவிஞர்கள் தலைகாட்டி வருகின்றனர். தமிழ் உரை நடையும் புத்துணர்ச்சிபெற்றுப் பாமரர்களும் துய்க்கும் நிலையில் கதைகள், புதினங்கள், நாடகங்கள் போன்ற புதிய மறுமலர்ச்சி இலக்கிய வகைகள் ஏராளமாகத் தோன்றி வருகின்றன.

படக்காட்சிகள் தாய்மொழிக்கு ஏற்றம் அளித்திருக் கின்றன. கலேத்துறையில் தமிழ்ப்படங்கள் சிறிது சிறிதாக முன்னேறி, எண்ணற்ற பேசும் படங்கள் தோன்றி, எழுத்து மணம் அறியாத பாமரமக்களின் கருத்துலகத்தைச் சிறீது வளர்த்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இவை சிற்றுார்களில் வாழும் மக்களுடைய நடை உடை பாவனைகளேயும் மாற்றிவிட்டன. நாளிதழ் களிலும் பிற வெளியீடுகளிலும் வெளிவரும் விளம்பரங் களுடன் நில்லாது தாய்மொழிமூலம் பல வணிகவிளம்பரங் களும் பேசும் படங்கள் வடிவில் தோன்றிப் பாமரமக்களின் கருத்துலகத்தைப் பன்முகவிரிவடையச் செய்துவருகின்றன. மருத்துவம், சுகாதாரம், கல்வி, நாட்டு நடப்புக்கள் ஆகிய துறைகளிலும் இப்பேசும் தமிழ்ப்படங்கள் பெருந்தொண் டாற்றி வருகின்றன.

வானுெலி, தொலைபேசி, ஒலிபெருக்கி, கிராமஃபோன் போன்ற பேசும்பொறிகள் தோன்றிய பிறகு மக்களின் கூட்டுறவு நெருங்கி வருகின்றது. தொலைக்காட்சியைக் கண்டறிந்த பிறகு இவ்வுறவு மேலும் நெருங்குகின்றது. இடத்தாலும், காலத்தாலும் செய்மையிலிருக்கும் மக்களிட மும் தாம் ஏதோ ஒரு விதத்தில் உறவு கொள்ளுகின்ருேம். காலஞ்சென்ற பாடகர்களின் குரல்களையும் கிராமஃபோன் மூலம் கேட்க முடிகின்றது. பல ஆயிரம் மைலுக்கு அப்பாலும் இருக்கின்ற மக்களிடம் தொலைபேசி மூலம் பேசுகின்ருேம். கம்பியில்லாத் தந்தி நமக்கு நல்கும் வசதிகளோ சொல்லும் தரமன்று.

இந்தப் புதிய சாதனங்களிலெல்லாம் இன்று தாய் மொழியின் தாண்டவத்தைக் காண்கின்ருேம். வணிகர்