பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 297

கட்டுரையைப் படிக்க அதிகக் காலம் தேவையாக இருப் பதை உணரலாம். -

படிப்பின் விரைவை அளந்தறிவதற்கு மேடுைகளில் பல சோதனைகளே நடத்தி முடிவு கண்டறிந்துள்ளனர். சாதாரண்மாக உயர்நிலைப்பள்ளிகள், அல்லது கல்லூரி. களில் மாணுக்கன் ஒரு மணித்துளிக்குச் சற்றேறக் குறைய 250 சொற்கள் வீதம் படிக்கலாம் என்று கணக்கிடப்பெற்றுள்ளது. வேகமாகப் படிப்போர் கதைப் பகுதியைப் படிக்கும்பொழுது மணித்துளிக்கு 400 சொற்கள் வீதம் படிக்கலாம் என்று கண்டறியப்பெற்றுள்ளது. மணித்துளிக்கு 1400 சொற்கள் வீதம் படிக்கும் ஒரு சிலரும் இருப்பதாக அறிந்துள்ளனர். படித்தலில் தனிப் பட்டவர்களின் வேக அளவுகளில் அதிக வேறுபாடுகள் உள்ளன. தக்க பயிற்சிகள் அளிக்கப்பெற்ருல் எல்லோருடைய படிப்பின் வேகமும் அதிகமாகும். இத்தகைய பயிற்சியினுல் வேகமாகப் படிப்போர் ஒருவரின் வேகம் மணித்துளிக்கு 450 சொற்களிலிருந்து 700 சொற்களுக்கு அதிகரித்துள்ளது என்றும், மெதுவாகப் படிப்போர் ஒருவரின் வேகம் மணித்துளிக்கு 175 சொற்களிலிருந்து 250 சொற்களுக்கு அதிகரித்துள்ளது என்றும், ஐம்பது கல்லூரி மானக்கர்களுக்கு அளிக்கப்பெற்ற ஒரு சோதனையின் மூலம் கண்டறியப்பெற்றுள்ளது. படிப்பில் வேகத்தை உண்டாக்கும் ஒரு சில கூறுகளை ஈண்டுக் கவனிப்போம்.

நாம் புத்தகத்தைப் படிக்கும்பொழுது நமது கண்கள் அச்சு வரியின்மீது நேராகச் செல்லுவதில்லை ; அவை மாறி மாறி நின்று செல்லுகின்றன. அவற்றைக் கண் கிறுத்தங்கள் (Eye fixations) என்று குறிப்பிடுவர் ; அவை சுமார் கால் விளுடி அவ்வாறு நிற்கின்றன. அவ்வாறு நிற்கும் பொழுதுதான் கண்கள் எழுத்துக்களைப் பார்க்கின்றன. கண்கள் நிற்கும் காலத்தை கண் கிறுத்த அளவு (Eye fixation limit) argårp (35.51,1565.jf. 52(5 Sufius'sb அதிகக் கால அளவு நிறுத்துபவர்கள் மெதுவாகப் படிப்போர்