பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 2.99%

கண்சாண் அகன்ருல் நிறுத்தங்களும் பிற்போக்குகளும் குறையும் காலக்கழிவும் நேரிடாது. கருத்தும் சொற்களும் அறிந்தவைகளாக இருந்தால் நிறுத்தங்களும் பிற்போக்குகளும் குறைந்து கண்சாண் விரிவடையும். கண்சாண் விரிவடைவதற்குக் கீழ்வகுப்புக்களிலிருந்தே சில பயிற்சிகளை அளிக்கவேண்டும். மின்னட்டைப் பயிற்சிகள் இதற்கு நன்கு பயன்படும். சொற்கள், சொற்ருெடர்கள் எழுதப்பெற்றுள்ள அட்டைகளை வகுப்புக்கு ஏற்றவாறு தொகுத்து அவற்றை விரைவாக மாற்றிக் காட்டிப் பயிற்சிகளே அளித்தால் கண்சாண் விரிவடையும்.

கண்களில் சாதாரணமாகக் காணக்கூடிய தூரப்பார்வை, கிட்டப்பார்வை, உருட்சிப்பிழை (Astigmatism) போன்ற கோளாறுகள் இருப்பினும் படிப்பின் வேகம் குறையும். மாணுக்கர்களிடம் கண்கோளாறுகள் இருப்பதாக ஆசிரியர்கள் கண்டால் கண்மருத்துவரிடம் அனுப்பிச் சோதிக்கச் செய்து தக்க கண்ணுடிகள் போட்டுக்கொள்ளச் செய்யவேண்டும்.

எத்தகைய பயிற்சியிலும் நல்ல பழக்கம் ஏற்படுவதற்குமுன் விரைவை உண்டாக்க முனையக் கூடாது ; படிப்பிலும் அப்படித்தான். படிப்பில் விரைவை உண்டாக்கத் தொடங்குவதற்குமுன் முதலில் சரளமாகப் படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சரளமாகப் படிப்பதற்குத் தடையாக இருக்கும் பல கூறுகளே முன்னதாகக் களைய வேண்டும். சில குழந்தைகள் சொற்களேயே பிரித்துப் பிரித்துப் படித்து, பிறகு சேர்த்துப் படிக்கின்றனர் ; சொற்களைப் படித்தாலும் அவற்றை விரைவாகப் படித்துக் கொண்டு போவதில்லை. தவிர, சொற்களைத் தனித்தனியாகப் படித்தலும் நல்ல பழக்கம் அன்று. சொற்ருெடர்களாகப் படித்துக் கருத்துணரும் பழக்கத்தைத் தொடக். கத்திலிருந்தே கைவரச் செய்யவேண்டும்.