:300 தமிழ் பயிற்றும் முறை
மாணுக்கர்கள் உட்காரும் நிலையும் அறையின் ஒளியும் வேகத்தைத் தடைப்படுத்தக் கூடியவை. குறைவான ஒளி கண் பார்வைக்குப் போதாது ; அதிகமான ஒளியால் கண் கூசும் : இரண்டும் படிப்பின் விரைவைக் குறைப்பவை. எனவே, வசதியான நிலையில் இடப்புறத்திலிருந்து வெளிச்சம் வரும்படி ஏற்பாடுகள் செய்யவேண்டும். படிக்கும்பொழுது முன்புறத்திலிருந்தாவது பின்புறத்திலிருந்தாவது வெளிச்சம் வருதலைத் தவிர்க்கவேண்டும். நோாக நிமிர்ந்து உட்கார்ந்து புத்தகத்தை மார்புக்கு நேராகப் பன்னிரண்டு அங்குல அளவில் பிடித்துக் கொண்டு குழந்தைகளைப் படிக்கச் செய்யவேண்டும்.
படிக்கும்பொழுது பொருளறியாத சொற்கள் அடிக்கடி தட்டுப்பட்டால் கருத்துணர்தல் தடைப்படுவதுடன் படிக்கும் விரைவும் குறைகின்றது. படிக்கும் பயிற்சி யளிக்கப் பயன்படுத்தும் புத் தகங்கள் கருத்துணர்ந்து விரைவாகப் படிக்கக்கூடியவையாக இருத்தல் வேண்டும். புத்தகங்களில் புதிய சொற்களே அளவு மீறிக் கையாளக் கூடாது. புத்தகத்தில் சொற்சுமை (Vocabulary burden) மிகக் குறைவாக இருத்தல் வேண்டும். சொற்சுமை என்பது, ஒரு புத்தகத்தில் புதிய சொற்கள் எந்த விகிதத்தில் நுழைக்கப் பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக 1000 சொற்களுள்ள ஒரு பாடநூலில் 120 பல்வேறு புதிய சொற்கள் நுழைக்கப் பெற்றிருந்தால் அப்புத்தகத்தின் சொற்சுமை இ2 = 8.8 அஃதாவது அப்புத்தகத்தில் எட்டுச் சொற்களுக்கு ஒரு புதிய சொல் வீதம் இருக்கின்றது என்பது அதன் பொருள். ஒரு புத்தகத்தின் சொற்சுமையைக் குறைக்க வேண்டுமானல் தெரிந்த சொற்களே அதிகமாக்கிப் புதிய சொற்களைக் குறைக்க வேண்டும். இதனுல் ஒரு பெரிய புத்தகத்திலிருப்பதைவிட ஒரு சிறிய புத்தகத்தில் சொற்சுமை அதிக மிருத்தல் கூடும் என்பது புலனுகின்றது. ஆனால், தமிழில் சொற்சுமையை அளவு படுத்தி எழுதப்பெற்ற புத்தகங்கள் இல்லை ; எழுதுவோர் இதைக் கவனித்து எழுதுவதே