பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 303

முக்கியத்துவமும் தெரியும். தாம் தொகுத்த சொற்பட்டியால் ஆசிரியர்கள் எச்சொற்களே முக்கியமாகக் கற்பிக்கவேண்டும் என்பதை அறியலாம் என்று தார்ன்டைக் கருதுகின்றர். வேறுசில சொற்பட்டிகளும் சில கல்வி நிபுணர்களால் ஆயத்தம் செய்யப்பெற்றுள்ளன.

கல்வியின் முக்கிய உறுப்பாகிய படிப்பு நன்கு கைவரப் பெறுதற்கும், படிப்பில் விரைவு ஏற்படுவதற்கும் மானுக்கர்களின் சொற்களஞ்சியம் பெருக வேண்டும். சொற்களே விரைவில் நினைவுகூர்தல்தான் படிப்பில் விரைவை வளர்க்கும் என்ற கருத்து நிலவி வந்தது. எனவே, பழங் காலத்தில் சொற்களைக் கற்பிப்பதில்தான் பெரும்பகுதியான காலம் செலவழிக்கப்பெற்றது. இவ்வாறு கற்பிக்கப்பெற்ற மாணுக்கர்களுடைய படிப்பின் விரைவும் கருத்துணர்தலும் குறைந்திருப்பதை நாளடைவில் அறியலாயினர். எனவே, சொற்களைக் கற்பிக்கும் முறைகள் செல்வாக்கிழந்து கருத்துணர்தலேக் கற்பிக்கும் முறைகள் செல்வாக்கடைந்தன. இதல்ை பலர் புதிய சொற்களே அறிவதில் தடுமாற்றம் அடைந்தனர்; தவருகவும் பொருளுணர்ந்தனர். இன்று சொற்களஞ்சியத்தில் அறிவுக்குறைவு இருந்தால் கருத்துணர்தலில் திறன் நன்கு ஏற்படாது என்ற கருத்து நிலவுகின்றது. எனவே, சொற்களஞ்சியப் பெருக்கத்தில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.

முதலில் குழந்தைகளுக்குச் சொற்களைக் கேட்டுப் பொருளுணர்தலில்தான் பழக்கம் ஏற்படுகின்றது. பெரும்பாலான குழந்தைகள் தாம் சொற்களைக் கையாளுவதற்கு முன்பே பிறர்மூலம் கேட்கும் சொற்களே விரைவாக அறிந்து கொள்வதை அனுபவத்தில் காண்கின்ருேம். ஒருவருடைய வாழ்க்கை முழுவதிலும்கூடக் கேள்வியறிவில்ை பெறக்கூடிய சொற்களின் தொகைதான் மிகுதியாக உள்ளது. குழந்தைகள் படிக்கத் தொடங்கும்பொழுது பார்வையினல் பல சொற்களே அறிகின்றனர். இப்பொழுது அவர்கள், தாம் கேள்வியறிவினல் முன்னர்ப் பெருத