804 தமிழ் பயிற்றும் முறை
பல புதிய சொற்களையும் தெரிந்து கொள்ளுகின்றனர். நாளடைவில் எழுதுவதலுைம் எழுத்துக் கூட்டுவதலுைம் பல சொற்களே அறிகின்றனர். எனவே, குழந்தைகள் கேட்பதாலும், பேசுவதாலும், படிப்பதாலும், எழுதுவதாலும் பல சொற்களைப் பொருளுணர்ந்து கற்கின்றனர். தொடக்கநிலைப் பள்ளிக் குழந்தைகட்கு எழுதப்பெறும் புத்தகங்களில் குழந்தைகள் ஏற்கெனவே அறிந்துள்ள சொற்களையும், எளிதில் விளக்கவல்ல சொற்களேயும்தான் கையாள வேண்டும். இதுபற்றிய விதிகள் பின்னர்க் கூறப்பெறும். ஈண்டு மாளுக்கர்களின் சொற்களஞ்சியத்தைப் பெருக்கும் ஒரு சில வழிகளை மட்டிலும் ஆராய்வோம்.
கருத்துணரும் பட்டறிவு உண்டாக்கல் . படிக்கும் அறிவு உண்டாவதற்கு முன்பு குழந்தைகள் தொட்டு, கண்டு, கேட்டு, முகர்ந்து, சுவைத்து அறியக்கூடிய புலனுணர்வு அனுபவங்களே அதிகம் உண்டாக்க வாய்ப்புக்களைத் தருதல் வேண்டும். பெற்றேர்களும் ஆசிரியர்களும் அடிக்கடிக் குழந்தைகளைப் பல இடங்களுக்கு அழைத்துச் துச் சென்று பல பொருள்களைப்பற்றிய அனுபவங்கள் கிட்டும் படி செய்தல் வேண்டும். கடைத்தெரு, புகைவண்டி நிலையம், சந்தை, பூம்பொழில்கள், கோவில்கள், திருவிழாக்கள் நடைபெறும் இடங்கள் போன்றவற்றிற்குக் குழந்தை. களே அடிக்கடிக் கூட்டிச்சென்று அவர்கள் கேட்கும் வினுக்களுக்குப் பொறுமையுடன் விடையளித்து அவர் களின் பட்டறிவை வளர்க்கவேண்டும். பல இடங்களுக்குச் சென்று பல பொருள்களேக் காண்பதால் புலன்காட்சியும் (Perception), பல பொருள்களைப்பற்றி வினுக்கள் மூலமும் நேரிலும் அறிவதால் கருத்துக் கோடலும் (Conception) வளர்ந்து உறுதியடைகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் மாணுக்கர்களே இம்மாதிரியாக வெளியில் கூட்டிச் செல்லும் வாய்ப்புக்களை அளித்தாலும், பல பொருள்கள் பற்றிய அறிவினை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.