பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 305

நேர்முக அனுபவம் அளிக்க வாய்ப்பு இல்லாதபொழுது, பேசும் படங்கள், அசையும் படங்கள், நழுவங்கள் (Sides), சாதாரணப் படங்கள், விளக்கப் Liu sārāsir (Diagrams) போன்றவைகளால் பல பொருள். களைப்பற்றிய அனுபவங்களைத் தருதல் வேண்டும். கதை சொல்லல், ஆசிரியர்கள் வாய்விட்டு நன்ருகப் படித்தல் போன்றவை முதலிரண்டு வகுப்புக்களில் இவ்வித அனுபவங் களுக்கு மேலும் பெருந்துணையாக அமையும். இயல்பான பேச்சுக்கள், உரையாடல்கள் முதலியவற்ருல் தொடக்க நிலையில் பல பொருள்பற்றிய பட்டறிவுகளே உண்டாக்கலாம். குழந்தைகளுக்கு இம்மாதிரியான வாய்ப்புக்கள் அளிக்கும்பொழுது அவர்கள் தெரியாதனவற்றை உரிமையுடன் வினவ வாய்ப்புக்களைத் தருதல் வேண்டும்.

படித்தலால் சொற்களஞ்சியத்தைப் பெருக்கல் : குழந்தைகள் படிக்கத் தொடங்கியவுடன் சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதில் பல உபாயங்களைக் கையாளலாம். மின்னட் டைகள், கட்டளைச் சொற்ருெடர்கள் முதலியவற்றில் அடிக்கடிப் பயிலும் சொற்கள், இன்றியமையாதவாறு பயன்படக்கூடிய சொற்கள், வீடு பள்ளி செல்லும் இடங்கள் முதலிய இடங்களில் காணக்கூடிய பொருள்களைப்பற்றிய சொற்கள், உண்பன தின்பன பருகுவன போன்ற உணவுப் பொருள்கள், உறவினர், வீட்டுப் பிராணிகள், மரம் செடி கொடி வகைகள் ஊர்திகள் உடலுறுப்புக்கள் விளையாட்டுப் பொருள்கள் முதலியவற்றின் சொற்கள் ஆகியவற்றைக் கற்பிக்கலாம். சில நிகழ்ச்ச்சிகளையும் இம் முறையில் கற்பிக்கலாம். சொற்களைச் சில சிலவாகப் பொருளுணரும்படியாகக் கற்பிக்கவேண்டும் ; பலவற்றை ஒரே சமயத்தில் கற்பிக்கத் தொடங்கிளுல் கருத்துணர். தலில் மயக்கம் ஏற்பட இடம் உண்டு. சொற்களைத் தனித்தனியாகக் கற்பிப்பதுடன், இணைமொழிகளாகவும், தொடர் மொழிகளில் வைத்தும், மரபுத்தொடர்கள், பழமொழிகள், அறமொழிகள், உவமைகள் வடிவத்திலும் கற்பிக்க முனைய வேண்டும். மிகவும் அடிப்படையாகவுள்ள இன்றியமையாத

த-21