பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O 3 தமிழ் பயிற்றும் முறை

தொழில்களைப்பற்றிய பெயர் வினைச் சொற்களை முதன் முதலில் தொடங்கலாம்.

புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டவுடன் மேற் கூறியவாறு கற்பிப்பதுடன் வேறு சில முறைகளையும் மேற்கொள்ளலாம். குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்கக்கூடிய பொருள்களைப்பற்றி அவர்களறிந்த சொற்களேக் கொண்ட புத்தகங்களை முதலில் படிக்கக் கொடுக்க வேண்டும். எளிதாகவுள்ள புத்தகத்தில் ஒரு சில புதிய சொற்கள் கையாளப்பெற்றிருப்பினும், இடளுேக்கி மாணுக்கர்கள் அவற்றின் பொருளே உணர்ந்து கொள்ளக்கூடும். இன்றியமையாத சொற்களாக இருந்தால், அவை அடிக் கடிப் பயின்று வருதலைக்கொண்டு இடனுேக்கி அவற்றின் பொருளேத் தெளிவாக அறிந்து கொள்வர். அவ்வாறு பயிலும்பொழுது ஒரு சில சொற்களின் பொருளே அறியாவிடினும் குற்றம் இல்லே. சொற்களின் பொருளேத் தனித்தனியாக அறிந்து கொள்ளுவதைவிட இடனுேக்கி அறிதல் தான் சிறப்புடைத்து.

பாடப்புத்தகங்களில் காணப்பெறும் அருஞ்சொற்களைக் கற்பிப்பதில் சில முறைகளைக் கையாளலாம். அருஞ்சொற். களின் பொருளேப் பிறிதொரு சொல்லால் கூறுவதில் பயன் இல்லை. அவை பயிலும் பல இடங்களிலும் அவற்றை ஆசிரியர்கள் தம் வாக்கில் வைத்து வழங்கிக் கற்பிக்கவேண்டும். மாணுக்கரின் வாக்கிலும் பிறிதொரு இடத்தில் வைத்து வழங்குமாறு ஏவிப் பயிற்சி கொடுக்கலாம். நல்ல பாடப்புத்தகமாக இருந்தால் புதுச் சொற்கள் பல இடங்களில் பல்வேறு முறையில் வழங்கப்பெற்று இருக்கும். சில அரிய சொல்லாட்சிகள், மரபுத்தொடர்கள், இலக்கண அமைதியுள்ள தொடர்கள் முதலியவற்றை நெட்டுருச் செய்யச் சொல்லி அவற்றை அப்படியே தம் வாக்கில் வைத்து வழங்குமாறு மரணுக்கர்களே ஏவலாம். சொற்களே இனப்படுத்திக் கற்கும் முறைகளையும் கையாளலாம்; சொற்களே நேரெதிர்ச் சொற்களோடும், ஒரு பொருள் குறித்த