பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 307

பல சொற்களே ஒன்ருகத் தொகுத்தும், பல பொருள் குறித்த ஒரு சொற்களைச் சேர்த்தும் இனப்படுத்திக் கற்பிக்கலாம். ஒரே வேரினின்ருே பகுதியினின்ருே பிறக்கும் பல சொற்களே ஒன்று சேர்க்கும் பயிற்சிகளையும் தரலாம். ஒரு பொருளே, ஒரு தொழிலே, ஒரு தலையை, ஒரு நிலையத்தை ஒரு வேலையை, ஒரு நிகழ்ச்சியை-இவை போன்ற பிறவற்றை விளக்கும் சொற்களையும், சமய உண்மைகளை விளக்கும் சொற்களையும் தொகுதித் தொகுதியாக வகைப் படுத்திக் கற்பிக்கலாம். குறில் நெடில் தொடங்கும் சொற்களையும், முதல் நீண்டு தொழில் பெயராகும் சொற்களையும், ஒரேமுடிபுடைய சொற்களேயும் இனப்படுத்திக் கற்பிக்கலாம். மாணுக்கர்களின் உற்சாகத்தை அனுசரித்து இவ்வாறு கற்பித்தலே மேற்கொள்ளவேண்டும். உற்சாகம் இல்லையெனத் தெரிந்தால், வேறு முறைகளைக் கையாள வேண்டும்.

புதிதாகக் காணப்படும் சொற்களைக் கொண்டு தொகைச் சொற்களே உண்டாக்கி அவற்றின் பொருளே வலியுறுத்தலாம். ர, ற, ல, ழ, ள, ண, ந, ன, முதலிய ஒத்த ஒசைகளால் பொருள்படும் சொற்களே இணை இணையாகத் தொகுத்துக் கற்பிக்கலாம் ; பெரும்பாலும் அவற்றைச் சொற்ருெடர்களில் வழங்கிப் பொருள் வேறுபாடுகளை உணர்த்திக் கற்பித்தல் சாலப் பயன்தரும். அடைமொழி. களே முதல் கடைகளிற் சேர்த்து வேறு புதிய சொற்களை உண்டாக்கி அவற்றைக் கற்பிக்கலாம். காலே-உச்சி-மாலை சேர்ந்து ஒரு பகல் ஆகின்றது ; அடிவாரம்-நடு-குடுமி சேர்ந்து மலையாகின்றது; இயல்-இசை-நாடகம் சேர்ந்து தமிழாகின்றது என்பன போன்ற எடுத்துக்காட்டுக்களால் மூன்று சொற்கள் தனித்தனி சேர்ந்து ஒரு முழுப்பொருளைக் குறிக்கும் சொல்லேப் பிறப்பிக்குமாறும் புதுச் சொற்களே ஆக்கிக் காட்டலாம். விடுகதைகளே அவற்றின் விடைகள் வாயிலாகவும், சிறிய கதைகளைச் சிறு தொடர் களாகத் தனித்தனியாக எழுதிச் சேர்த்துக் கதையைப் படிக்கச் செய்தும் புதிய சொற்களைக் கற்பிக்கலாம்.