பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2 தமிழ் பயிற்றும் முறை

எழுத்துக்களாக வளர்ந்தது. இரண்டொரு கருத்துக்களே யன்றிப் பல கருத்துக்களே எழுதிவரும்பொழுது விரைவு காரணமாக ஒவியங்கள் இரண்டொரு வரிகளாகச் சுருங்கின. இவை முழுநில ஓவியமாக விளங்காமல் ஒவிய அறிகுறிகளாகவே அமைந்தன. சீன எழுத்துக்களைப் பார்த்தவர்கள் இந்த உண்மையை அறிவர். எகிப்திய எழுத்துக்களும் மொகஞ்சதாரோ எழுத்துக்களும் ஒரு சிறிது இத்தகையனவே ஆகும். நாளடைவில் அந்த அறிகுறி ஒவியமும் ஒரு சொல்லாக நின்று அந்தச் சொல்லே அறிவியாது அந்தச் சொல்லின் முதல் எழுத்தினமட்டிலும் அறிவிக்க வந்தது. பிறகு சொல்லின் பொருளேயன்றிச் சொல்லின் எழுத்துக்களையும் மக்கள் பிரித்தறிய விழைந் தனர். அந்த விழைவே ஒலி எழுத்துக்களாக வளர்ச்சி பெற்றது. ஆனல் வடமொழியிலும், தமிழில் பல இடங்களிலும் எழுத்துக்கள் என்பவை உயிர்மெய் எழுத்துக்களாக இருக்கக் காண்கின்ருேம். அலகுநிலை பெறுவனவற்றையே பெரும்பான்மையும் தனித்தனி எழுத்தாக எழுதுகின்றனர். இவற்றை அலகு எழுத்துக்கள் (Syllable writing) 6T6T surth. இந்த நிலைக்குப் பின்னர் ஆங்கிலம் முதலியவற்றிற்போலக் கூட்டெழுத்தாம் அலகெழுத்துக்களைப் பிரித்துத் தனித்தனி எழுத்தாக எழுதி வந்தனர். ஒவிய எழுத்துக்கள், ஓவிய அறிகுறி எழுத்துக்கள், ஒலி எழுத்துக்கள், அலகு எழுத்துக்கள், தனி எழுத்துக்கள் என்ற பலவகை நிலைகளாக எழுத்தின் வரலாறு வளர்ந்தது. இவையற்றிய விரிவான விவரங்களே யெஸ்பர்சன், வெண்டிரீஸ் போன்ற அறிஞர் நூல்களில் கண்டு கொள்க."

குழந்தைகளின் எழுத்துப் பயிற்சிக்குரிய பருவம் : குழந்தைகட்கு எழுத்துப் பயிற்சி அளிப்பதற்கு முன்னர் அவர்கள் அதற்கேற்ற பருவத்தை எய்திவிட்டனரா என்று கவனித்தல் இன்றியமையாதது. எழுதுகோலே விரல்

  • William A. Mason : A History of the Art of Writing. என்ற நூலில் இத்தகைய செய்திகள் விரிவாகத் தரப்பெற்றுள்ளன.