பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 தமிழ் பயிற்றும் முறை

என்பது எழுத்துக் கலேயின் வரலாற்றிலிருந்து அறியும் உண்மை. இதிலிருந்தும் படிக்கும் பழக்கம் ஒரளவு கைவரப்பெற்ற பிறகே எழுத்துக்களே எழுதக் கற்பித்தல் நலம் என்பது தெளிவாகின்றது.

பழைய முறைப்படி மொழிப் பயிற்றலில் முதலில் குழந்தைகட்கு எழுத்துக்களே எழுதக் கற்பித்தனர்; அதிலும் அவற்றை நெடுங் கணக்கு வரிசைப்படியும் கற்பித்தனர். கற்ற எழுத்துக்களைக் கூட்டிப் படித்தலில் பின்னர் பயிற்சி அளிக்கப்பெற்றது. இம்முறை உளவியல் முறைக்குச் சிறிதும் உகந்தது அன்று. அன்றியும், இம் முறையில் சுவையும் விருப்பமும் ஏற்படுவதற்கு இடமுமில்லை. இம்முறை மொழிக் கற்றலில் வெறுப்பையே விளைவிக்கும். புதியமுறையில், பேச்சுப் பழக்கம் கைவரப்பெற்ற பிறகும், சிறிதளவு படிக்கும் பழக்கம் கைவரப்பெற்ற பிறகும் எழுத்துப் பயிற்சிக்கு வழிகோலப் பெறுகின்றது. திட்ட மான எழுத்துப் பயிற்சி தருவதற்கு முன்னர் முற் பயிற்சிகளாக விளையாட்டுமுறையில் சில பயிற்சிகள் அளிக்கப் பெறுகின்றன.

எழுதுவதற்குமுன் மேற்கொள்ளத்தக்க முற் பயிற்சிகள் : நினைத்தவுடன் குழந்தைகளால் எழுதமுடியாது. எழுதுவதற்கு முன்பதாகப் பொருளறிவுவேண்டும் ; சொல்லறிவு வேண்டும். அதற்கு முதலில் பேச்சும், படிப்பும், பின்னர் எழுத்தும் வருவதே முறையாகும். எழுதத் தொடங்குவதற்குமுன் குழந்தைகளின் கை, முன்கை, மணிக்கட்டு, விரல்கள், தசை நார்கள் முதலியவை விருப்பப்படி இயங்க வல்ல பயிற்சிகளைப் பெற்றிருத்தல்வேண்டும். எழுது கோல்கள், கற்பலகை முதலிய எழுது கருவிகளே அடக்கியாளும் வன்மை பெறவேண்டும். ஐந்து வயதுவரை வீட்டிலிருந்த குழந்தைகள் ஒரளவு இத்திறனைப்பெற்றிருத்தல்கூடும். செவிலிப் பள்ளிகளிலும், குழந்தைப்பள்ளி களிலும் இதற்கெனத் தக்க புலப் பயிற்சிகள் அளிக்கப் பெறுகின்றன. அப் பள்ளிகளில் பயில வாய்ப்பில்லாத குழந்தைகளின் தொகைதான் மிகுதி. அவர்கள் முறைப்படி