பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 31 7

அல்லது இறுகப் பிடித் தலையும் தவிர்க்கவேண்டும். எழுது கோலை நடுவிரலில் தாங்கும்படி வைத்து சுட்டு விரலாலும் கட்டைவிரலாலும் பிடித்துக்கொண்டு கற்பலகையை இடது கையால் பிடித்து வலது முழங்கால்மீது வைத்து, சற்று இடப்புறம் சாய்த்துக்கொண்டு எழுதுதல் சிறப்புடையது. கணக்கப்பிள்ளை-சாய்வு மேசையின்மீது வைத்து எழுதப் பழகுவதே சாலச் சிறந்தது.

சில கையெழுத்துப் பயிற்சிகள்

மாணுக்கர்களின் கையெழுத்து நல்லமுறையில் அமைவதற்குத் தொடக்க நிலைப்பள்ளி வகுப்புக்களில் சில கையெழுத்துப் பயிற்சிகள் அளிக்கப்பெறுகின்றன. அவை : (1) பார்த்து எழுதுதல்; (2) அச்சிட்ட பயிற்சிப் புத்தகங்களில் எழுதுதல்; (8) சொல்லுவதை எழுதுதல் ஆகியவை. இவை மூன்றுமே சாதாரணமாக நடைமுறையில் கையாளப் பெற்றுவரும் முறைகளாகும். இவை ஒவ்வொன்றையும்பற்றி ஈண்டு ஒரு சிறிது ஆராய்வோம்.

(1) பார்த்து எழுதுதல் : இளஞ்சிருர்கள் எதைப் பார்த்தாலும் அதன்படியே பார்த்து எழுத விரும்புகின்றனர். இவ்விருப்பத்தை ஆசிரியர்கள் வளரச்செய்து பயன்படும் முறைகளில் கொண்டுசெலுத்தவேண்டும். முதலில் பெயர்கள் எழுதிய அழகிய படங்களைக் குழந்தைகளுக்குக் காட்டி அவற்றைப் பார்த்து அவர்களே வரையச் செய்யலாம்; அப்படங்களின் பெயர்களேயும் கீழே அல்லது எதிர்ப் புறத்தில் எழுதத் தூண்டலாம். நாளடைவில் புத்தகத்திலுள்ள சொற்களை அல்லது பிறர் எழுதிய சொற்களைப் பார்த்தெழுதச் செய்யலாம். படங்களின்கீழ் எழுதப் பெற்றுள்ள சொற்கள், மின்னட்டைகளில் காணப்படும் சொற்கள் ஆகியவற்றை முழுச் சொற்களாகவே எழுதப் பழக வேண்டும். சிறுசிறு சொற்களே எழுதுவதிலிருந்து வாக்கியங்களே எழுதப் பழகலாம். கட்டளே அட்டைகள், விளம்பரங்கள், மின்னட்டைகள், குழந்தைப் பாடல்கள்