பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்க்ள்

படுத்த வேண்டும். இலக்கியச் சுவையில் திளைக்கும் ஆற்றலை மாணாக்கர்களிடம் வளர்த்து விட்டால் அதுவே தாய்மொழியாசிரியர்கள் தாம் கற்பித்தலில் கண்ட வெற்றி யாகும். ‘அறிதோறும் அறியாமையைக் காட்டும்’ இலக்கியச் சுவையில் திளைத்த ஒருவர்,

இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்

[1]

என்றல்லவோ கூறிப்போந்தார்? இலக்கிய ஆசிரியர்களின் படைப்புக்கள் யாவும் தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் பயிலுந்தோறும் புதுப்புதுப் பொருள் சுரந்து இன்ப மூட்டும் தெய்வ ஊற்றுக்களாகும். இலக்கியங்களில் இலை மறை காய்களாகச் செறிந்து கிடக்கும் உள்ளுறை உவமம் இறைச்சிப் பொருள் போன்ற பொருள் நயங்களையும், அவற்றின் வெளித் தோற்றங்களாகக் காட்சியளிக்கும் மோனை எதுகை மடக்கு யமகம் திரிபுபோன்ற சொல் நயங்களையும் கண்டுணர்ந்து சுவைக்கும்பொழுது என்றுமே காணாத இன்பம் பயத்தலை இலக்கியச் சோலைகளில் புகுந்து பார்ப்பவர்கள் எளிதில் உணர்வர்.

பொருள் காரணமாக, பொறி கருவியாக, நுகரப்படும் இன்பம் பொருளற்ற நிலையில் இழக்கப்படுகின்றது. பொருளால் பெறப்படும் இன்பம் வளரவளர அதற்குக் காரணமாகவுள்ள பொருள் சுருங்கிக் கடைசியில் அதுவும் இல்லை யாகிவிடும். ஆனால், சிறுபான்மை பொறிகள் துணை நிற்ப, நுண்மாணுழைபுலங் கருவியாக நுகரப்படும் இலக்கிய இன்பம், இன்பங்கள் அனைத்திலும் தலைசிறந்தது என்பது அறிஞர் கண்ட உண்மை ; அறிவால் படைக்கப்பெறும் இவ்வின்பம் வளரவளர அதற்குக் காரணமாய அறிவும் மேன்மேலும் வளரும். தானும் வளர்ந்து தன் மூலத்தையும் வளர்க்கும் இலக்கிய இன்பம் மக்கள் நன்மைக்கு இன்றி யமையாது வேண்டப்படுவது. கம்பநாடரும்,


  1. தமிழ்விடு தூது—கண்ணி 151.