பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 31 9

ளுடைய சொற்களஞ்சிய அறிவையும், இலக்கண மரபுகளைத் தெரிந்து வழங்கும் ஆற்றலையும் ஒருவாறு தேறலாம். இடைநிலை வகுப்புக்களில் இவற்றைச் சற்று விரிவான முறையில் நடத்தலாம்.

கடத்தும் முறைபற்றிய குறிப்புக்கள்: நல்ல நடையும் பொருளும் பொதிந்த பகுதிகளைப் பொறுக்கி எடுத்துப் பயன்படுத்த வேண்டும். கீழ் வகுப்புக்களில் நடந்த பகுதிகளேயே பொறுக்கி எடுத்தல்வேண்டும். இடைநிலை வகுப்புக்களில் நெட்டுருச் செய்யத்தக்க நல்ல உரைநடை செய்யுட் பகுதிகளைப் பார்த்து எழுதச் செய்தால் சிறந்த பயனே விளைவிக்கும். எழுத்துக் கூட்டலில் தவறக்கூடிய சொற்களையும் சொற்ருெடர்களையும் உள்ளடக்கிய பகுதிகளைப் பார்த்து எழுதச் செய்தலால் நற்பயன் விளையும். மாளுக்கர்களைச் சொல்லிக்கொண்டே எழுதச் செய்து பிழைகளிருப்பின் அவற்றைத் திருத்தும்படி தூண்ட வேண்டும். மிகவும் குறைந்த அளவில் தொடங்கி ஆண்டின் இறுதியில் உயர்ந்த அளவுக்கு வரும்படி பயிற்சிகளே அமைத்துக் கோடல் சிறந்தது. இவ்வகையில் பார்த்து எழுதுவது, கேட்டு எழுதுவது, நினைவிலிருந்து எழுதுவது என மூன்றுவிதமான பயிற்சிகளைத் தரலாம். ஒவ்வொரு பயிற்சியும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிய வேண்டும். தொடக்கத்தில் ஐந்து மணித்துளியாகவும், நாளடைவில் படிப்படியாகப் பத்து அல்லது பன்னிரண்டு மணித் துளி வரையிலும் எழுதும் பயிற்சிகள் சிறந்தவை.

இப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் : கையெழுத்து திருத்தமாக அமைவதற்கு இஃது ஒரு வழியாகும்; தெளிவாகவும் வேகமாகவும் அமைவதற்கு ஒரு துண்டுகோலாகவும் அமைகின்றது. இப் பயிற்சி மாணக்கர்களின் உற்று. நோக்கும் பழக்கத்தையும் ஆற்றலையும் வளர்த்து எழுதும் பகுதிகள் தெளிவாக விளக்கமடைந்து உள்ளத்தில் அமையப் பயன்படும். இதல்ை நல்ல சொற்ருெடர்கள், மரபுத் தொடர்கள், பழமொழிகள், அரிய சொல்லாட்சிகள்