பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:20 தமிழ் பயிற்றும் முறை

முதலியவை பழக்கத்தில் அமைந்து அவை வழங்கும் இடங்களும் முறைகளும் விளக்கம் எய்தும். இது கவனக் குறைவாகவுள்ள மாளுக்கர்களுக்குக் கவனத்தை ஊட்டவல்லது. நிறுத்தற் குறிகளின் பயனே நன்கு உணர்வதற்கு இது துணையாக இருக்கும். மாணுக்கர்களின் எழுத்து வேலையில் நேரும் பிழைகள் மறைமுகமாக இப்பயிற்சியால் நீங்க இடம் உண்டு. இதைக் கட்டுரைப் பயிற்சிக்கு ஒரு வழிகாட்டியாகவும் முற்பயிற்சியாகவும் கொள்ளவும் கூடும்.

(2) அச்சிட்ட பயிற்சிப் புத்தகங்களில் எழுதுதல் : இப் பயிற்சி மிகவும் அருமையானதும் மிகுந்த முயற்சியை வேண்டுவதும் ஆகும். மூன்ரும் வகுப்பிலிருந்தே இதைத் தொடங்க வேண்டும். முதலில் நான்கு கோடுகள் உள்ள பயிற்சிப் புத்தகங்களை வழங்கலாம். எழுத்துக்களின் உடல், விசிறி, விலங்கு ஆகியவற்றின் உயரங்களைக் காட்ட இக்கோடுகள் உதவும். முதலில் பெரிய எழுத்துக்களால் ஆகிய வரிகளேயும், பிறகு வரவரச் சிறிய எழுத்துக்களாகிக்கொண்டு வரும் வரிகளையுமுடைய புத்தகங்களைப் பயன்படுத்த வேண்டும். சற்றுப் பழகிய பின்னர் இரண்டு கோடுள்ள பயிற்சிப் புத்தகங்களையும், பின்னர் ஒரு கோடுள்ள புத்தகங்களையும் கொடுக்கலாம். பின்னர் கோடு இல்லாத புத்தகங்களில் எழுதச் சொல்லலாம்.

பயிற்சிப் புத்தகங்களில் மாணுக்கர்கள் எழுதும்பொழுது கீழிருந்து மேலே எழுதிக்கொண்டு செல்லும் முறையைப் பின்பற்றவேண்டும். மேலிருந்து வந்தால், முதலில் உள்ள அச்சு வரியைச் சரியாகக் கவனியாது தாம் ஒருவேளை தவருக எழுதக்கூடிய முன் உள்ள வரியையே பார்த்து. தவருகவே எழுத நேரிடும். தமிழுக்கு உரிய சிறந்த செங்குத்தாக எழுதும் முறையைத் தொடக்கத்தி லிருந்தே வற்புறுத்த வேண்டும். செங்குத்தாக எழுதினல் தான் தமிழ் எழுத்துக்கள் அழகாகவும் தோற்றப் பொலிஷ்டனும் திகழும்.