கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 82夏
இம் முறையை இக்கால முறைவல்லார் விரும்புவதில்லை. ஆசிரியர் கரும்பலகையில் எழுதிக் காட்ட அதைப் பார்த்து எழுதுதலே சிறந்தது என்று இவர்கள் கருதுகின்றனர். எழுதும்பொழுது ஆசிரியரின் கை வளைதல், எழுத்து எங்குத் தொடங்கி எப்படிப் போகின்றது, எழுதுகோலப் பிடிக்கும் முறை, எழுத்தின் உருவம் முதலியவற்றை மாணுக்கர் கண்கூடாகக் கவனித்து ஆசிரியரைப் பின்பற்றலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
(3) சொல்லுவதை எழுதுதல் : ஆசிரியர் சொல்வதைக் கேட்டு மாணுக்கர்கள் பாராது எழுதுவது சொல்லுவதை எழுதுதல் (Dictation) என வழங்கப்படும். பார்த்து எழுதுவதைவிடக் கேட்டு எழுதுவதில் சுறுசுறுப்பும் விரைவும் அதிகமாக உண்டு. சொற்களிலுள்ள எழுத்துக்களைப் பிழையற மாணுக்கர்கள் எழுதுகின்றனரா என்று சோதிக்கவும், பிழையின்றி எழுதுவதில் பயிற்சி தரவும் இதை ஒவ்வொரு வகுப்பிலும் கையாளுவது அவசியமாகும். பாட வேளேப் பட்டியில் (Time-table) ஒரு பாட வேளே இதற்கென அமைக்கப் பட்டிருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் இது சரியாக நடைபெருததால் பள்ளித் தணிக்கையாளர்கள் இது சோம்பேறி யாசிரியர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக அமைகின்றது என்று கருதுகின்றனர்; அதனுல் அவர்கள் இதற்கெனத் தனிப்பாட வேளே அமைப்பதை ஒப்புக் கொள்ளுவதில்லை.
இன்று நடைமுறையில் சொல்லுவதை எழுதும் பயிற்சி சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதைச் சரியாக நடத்துவதற்கு ஆசிரியர்கள் இக் குறிப்புக்களைத் துணையாகக் கொள்ளலாம் : இப்பயிற்சிக்கெனத் தேர்ந்தெடுத்த பகுதியை ஆசிரியர் ஒருமுறை படித்துக் காட்டவேண்டும் ; மாணுக்கர்களைப் படித்துக்கொள்ளும்படி செய்தாலும் செய்யலாம். சொல்லும்பொழுது ஆசிரியர்கள் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லக்கூடாது. பொருள் தொடர்ந்து சென்று நிற்கும் இடங்களில் மட்டிலுமே
த-22