பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 323

இது கவனிக்கும் திறனேயும் கேட்கும் திறனேயும் மன ஒருமையையும் நன்கு வளர்க்கின்றது. நிறுத் தற்குறிகளேச் சரியாக வழங்குவதில் பயிற்சி அளிக்கின்றது. கையெழுத்தின் விரைவையும் தெளிவையும் வளர்ப்பதற்குத் துணையாக உள்ளது. ஆசிரியர் கற்பித்த உச்சரிப்பை மாளுக்கர் சரியாகப் பின்பற்றுகின்றனரா என்பதைக் கண்டறியவும், எழுத்துக் கூட்டலின் அறிவைக் கண்டறியவும், எச்சொற். களைத் தவருக எழுதுகின்றனர் என்பதைக் கண்டறியவும் இதைச் சிறந்த வழியாகச் செய்யலாம்.

நல்ல கையெழுத்தின் பண்புகள்

கையெழுத்தை இக்காலத்தில் சரியாகக் கவனிப்பவர்கள் இல்லை. கற்றுத் துறைபோகிய பெரும் புலவர்களின் கையெ ழுத்தும் நன்ருக இருப்பதில்லே. இளமையில் திருந்திய கையெழுத்து அமையாததே இதற்குக் காரணம் என்று சொல்லவேண்டும். நமது நாட்டுத் தந்தை காந்தியடிகள் தம் கையெழுத்தைப்பற்றி இவ்வாறு கூறுகின்ருர் :

" உடற் பயிற்சியை விலக்கியதனுல் நான் அதிகம் சிரமப்படவில்லை. வேருென்றை விலக்கியதனுல் இன்னும் சிரமப்படுகின்றேன். நல்ல கையெழுத்து கல்விக்கு இன்றியமையாதது அன்று என்ற மனப்பான்மை என்னிடம் எவ்வாறு அமைந்ததோ தெரியவில்லை. இங்கிலாந்து சென்றபோதுகூட இஃது என்பால் நிலைத்திருந்தது. பின்னர் நான் தென் ஆஃபிரிக்காவிலிருந்த பொழுது அங்குப் பிறந்து அங்கேயே கல்விகற்ற இளைஞர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் நல்ல அழகான கையெழுத்தினைக் கண்டபொழுது நான் மிகவும் நாணப் பட்டேன் ; கையெழுத்தில் கருத்தினைச் செலுத்தாதது குறித்து மிகவும் வருந்தினேன். குறைபாடான கல்வி. யால்தான் நல்ல கையெழுத்து அமையவில்லை எனக் கருதவேண்டும் என்ற உண்மை எனக்குப் புலப்பட்டது. பின்னர் என் கையெழுத்தைச் சீர்படுத்த முயன்றேன் :