பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 - தமிழ் பயிற்றும் முறை

ஆனல், அது காலங்கடந்த செயல். என்னுடைய குறைபாடு ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் ஓர் எடுத்துக் காட்டாக இருக்கட்டும். நல்ல கையெழுத்து அமைவது கல்வியின் இன்றியமையாத பகுதி என்பதை அவர்கள் அறியட்டும். குழந்தைகட்கு எழுதக் கற்பிப்பதற்குமுன் ஓவியம் வரையும் கலயைக் கற்பிக்கவேண்டும். மலர்கள், பறவைகள் பிற பொருள்கள் ஆகியவற்றைக் குழந்தைகள் உற்று நோக்குவதைப் போலவே ஒவ்வோர் எழுத்தையும் உற்று நோக்கி அறியவேண்டும். அப்பொருள்களை ஓவியமாக வரையக் கற்றபிறகுதான் எழுதக் கற்கத் தொடங்கவேண்டும். இவ்வாறு கையெழுத்தைக் கற்ருல் அழகான கையெழுத்து அமையும்.’’ ’

இவ்வாறு பல அறிஞர்கள் தம் கையெழுத்து சரியாக அமையாமையைக் குறித்து வருந்தியுள்ளனர். சில அறிஞர்களின் கையெழுத்து மிக நன்ருகவும் அமைத்திருந்திருக்கின்றது. அறிஞர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களேக் கற்பிக்கும்பொழுது இந்தக் கூறினே ஆசிரியர்கள் மாணுக்கர்களுக்கு வலியுறுத்திக் கூறவேண்டும். -

இன்றைய உலகில் எழுத்து வேலே கடல்போல் பரந்து கிடக்கின்றது. அச்சுப் பொறிகளும் தட்டச்சுப் பொறிகளும் கண்டறியப்பெற்றிருந்தாலும் கையில்ை எழுதப்பெறும் வேலை குறையவே இல்லை. வேலையின் மிகுதியால் மக்கள் விரைவாக எழுதி எழுத்தின் அழகையும் தெளிவையும் பறி கொடுக்கின்றனர். நல்ல கையெழுத்து நல்ல கல்விக்கும் மனப் பயிற்சிக்கும் அறிகுறி என்று சொல்லலாம். நல்ல கையெழுத்து மானுக்கர்களின் தசைநார்களே அடக்கியாள்வது மட்டுமன்றி மனத்தையும் நல்ல முறையில் பயில்விக்கின்றது. அழகான நல்ல முத்துப் போன்ற கையெழுத்தை யாரும் விரும்பிப் படிப்பர்; கண்களில் ஒற்றிக்கொள்வர். அடியிற் கண்டவற்றை நல்ல கையெழுத்தின் பண்புகளாகக் கொள்ளலாம். - * Mahatma Gandhi : The Story of my Experiment with Truth. - -