கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 8罗5
1. தெளிவு : ஒருவர் எழுதுவது பிறர் படிப்பதற்காகவே. எனவே, பிறருக்கு விளங்கும்படி தெளிவாய் எழுதுவதே முதற்கண் வேண்டப்பெறுவது. தனித் தனியாக எழுதினுல்தான் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக விளங்கும். சிலர் ஆங்கிலக் கையெழுத்துப்போல் கோவை. யாய்ச் சங்கிலிபோல் சேர்த்து எழுதுவர். இவ்வாறு எழுதினுல்தான் விரைவைக் கொடுக்கும் என்பது அவர் கொள்கை. சேர்த்து எழுதிக்கொண்டே போளுல் ஒவ்வோர் எழுத்துக்கும் எடுத்தெடுத்து எழுத வேண்டியிராது. இதனுல் காலக் குறைவும் விரைவும் உண்டாகத் தான் கூடும். ஆனல், தனித்தனியாக எழுதுவதோ தமிழ் எழுத்துக்களுக்குத் தெளிவுடன் பொலிவையும் தரும் ; இதுவே தமிழ் முறையும் மரபும் ஆகும். அன்றியும், சொற்களுக்கிடையிலும் இடம் விடப்பெறுதல் வேண்டும். எழுத்துக்களைக் கிறுக்கிச் செல்லாமல் முத்து முத்தாக எழுதவேண்டும் ; மொட்டையாக இராமல் கொம்புகள், வளைவுகள், விசிறிகள். சுழிகள் இவைகளைச் சரியாக அமைத்து எழுதவேண்டும். தொடக்கநிலை வகுப்புக்களில் எழுதக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எழுத்துக்களின் உருவங்களைக் குழந்தைகளுக்குச் சரியாக உணர்த்த வேண்டும். எழுத்துக்களை அமைப்பதில் தவருண பழக்கம் ஏற்பட்டு விட்டால், பின்பு அத் தவருன பழக்கத்தைப் போக்குவது கடினம். ஆகவே, எழுத்துக்களின் உருவ அமைப்மைப் பயிலச் செய்வதில் கருத்துான்றிக் கவனம் செலுத்தவேண்டும். சிலர் கொம்பை மேலிருந்து எழுதுவர். சிலர் ம' வைச் சுழியிலிருந்து தொடங்குவர். 'னே’, ‘ளே’, 8ல’, ‘8ண'களே எழுதும்பொழுது ன, ள, ல, ண க்களே எழுதிப் பின்னர் லவைச் சேர்ப்பர் சிலர்; சிலர் மேற்புள்ளியை விட்டுவிடுகின்றனர். இத்தகைய பிழைகளை அவ்வப்பொழுது எடுத்துக் காட்டித் திருத்த வேண்டும்.
நெடுங் கணக்கு வரிசையில் எழுத்துக்களைக் கற்பிக்காமல் ட, ப, ம முதலிய நேர்கோட்டு எழுத்துக்களைத் தொடங்குவதே விரைவிலும் எளிதிலும் எழுத்துப் பழக்கம்