பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 தமிழ் பயிற்றும் முறை

விளைவிக்கும் என்று கருதுவது ஆராயத்தக்கது. ஆசிரியர்கள் ட, ப, ம, ழ, ய முதலிய எழுத்துக்கள் ஒன்றிலிருந்து மற்ருென்று அமையும் முறையை வருவித்துக் காட்டலாம். எழுத்துக்களின் உருவ ஒற்றுமைபற்றி அவற்றை ஐந்து இனங்களாகப் பிரிக்கலாம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். அவை: (அ) ட, ப், ய, ம, ழ; (ஆ) ஈ, ர, ந, ங், ஐ, க, ச, த; (இ) எ, ஏ, ஞ, ஒ, ஓ, ஒள; (ஈ) ள, வ, ல, ன. ண; (உ) அ, ஆ, இ, உ, ஊ. இவற்றைக் கற்றபின் உயிர் மெய் எழுத்துக்களே எழுதுவது எளிதாகும். உயிர் மெய்யெழுத்தின் அமைப்பில் கால் (ா), வெள்ளிக்கால் (ள), ஒற்றைக் கொம்பு ()ெ, இரட்டைக் கொம்பு ()ே, வளைவுகள், சுழிகள், விசிறிகள் முதலிய கூறுகளேத் திருத்தமாக எழுதப் பயிற்றவேண்டும். க, ச, த போன்ற எழுத்துக்களே மொட்டையாக எழுதாது மூக்கு வைத்து எழுதுமாறு வற்புறுத்தவேண்டும்.

எழுதப் பழகும்போது ஆசிரியர் எழுதுவதைப் பார்த்தே குழந்தைகள் எழுதத் தொடங்குவர். சொற்களே உச்சரித்துக்கொண்டே ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிக் காட்டவேண்டும். ஆசிரியர் எழுதும் முறை. யைப் பார்த்து, அவர்கள் கை செல்லும் போக்கைக் கவனித்துக் குழந்தைகளும் எழுதுவர். அச்சிட்ட பயிற்சிப் புத்தகங்களைப் பார்த்து எழுதுவதைவிட இம்முறை மிகவும் சிறந்தது. இதற்கு ஆசிரியரின் கையெழுத்து அழகாக இருத்தல் வேண்டும். அவருடைய கையெழுத்தை மாதிரியாக அமைத்துக்கொண்டு குழந்தைகள் பின்பற்றுதல் எளிது. எனவே, ஆசிரியர் தன் கையெழுத்தை முதலில் சீர்படுத்திக் கொள்ளவேண்டும்.

2. விரைவு : காலம் கருந்தனம் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. காலம் விரைந்து செல்லுகின்றது.

தனித்தனியாக எழுத்துப் பயிற்சி கொடுக்கும்பொழுது எவ்வகையை முன்னர்த் தொடங்குவது என்பது ஆராயத் தக்கது.