பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் § 27

சின்னுட் பல்பிணி சிற்றறிவுடைய மக்கள் கரையற்ற கல்வியைக் கற்கவேண்டியுள்ளது. கற்றது கைமண்ணளவாகவும் கல்லாதது உலகளவாகவும் உள்ளது. எனவே, கற்பனவற் றையும் எழுத வேண்டியனவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும். தெளிவைப் பறிகொடுக்காது விரைவாக எழுதும் பழக்கம் ஏற்படவேண்டும். சில பயிற்சிகளால் இவ்விரைவைக் கைவரச் செய்யலாம் ; எழுத்தின் விரைவையும் சில ஆய்வுகளால் தேறலாம். ஆசிரியர் எழுது’ என்று கட்டளையிட்டதும் மாணுக்கர்களே தேர்ந்தெடுத்த ஒரு பகுதியை எழுதத் தொடங்கச் செய்து, நிறுத்து’ என்றதும் நிறுத்தச் செய்து, அக்கால அளவில் ஒரு மணித்துளிக்கு சராசரி எத்தனே எழுத்துக்கள் என்று கணக்கிடலாம். இம்முறையால் பல மாணுக்கர்களின் எழுத்து வேகத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம். திங்கள் ஒன்றுக்கு இம்மாதிரி இரண்டு மூன்று ஆய்வுகள் நடத்தி மாணுக்கர்களின் எழுத்து வேகம் முன்னேற்றம் அடைகின்றதா என்பதைச் சோதிக்கலாம். வகுப்பு உயர உயர எழுத்தின் விரைவும் அதிகரித்தல்வேண்டும். மூன்ரும் வகுப்பில் ஒரு மணித்துளிக்கு 35-40 எழுத்துக்களையும், நான்காவது வகுப்பில் 50-60 எழுத்துக்களையும், ஐந்தாம் வகுப்பில் 60 எழுத்துக்களையும் எழுதலாம் என்று கணக்கிட்டுள்ளனர். வளர்ந்தவர்கள் 100 எழுத்துக்கள் வரையில் எழுதலாம்.

8. அழகு : எழுத்துக்கள் அழகாக இருந்தால்தான் அவற்றைப் பார்த்துப் படிப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே, தெளிவிற்கும் விரைவிற்கும் அடுத்தபடியாக கவனிக்கப்படவேண்டியது அழகு ஆகும். இந்தப் பழக்கத்தைத் தொடக்கத்திலிருந்தே செய்வது நன்று. எழுத்துக்கள் அழகாக இருக்கவேண்டுமானல் அவற்றின் உருவம் சரியாக இருக்கவேண்டும். அவை மேலும் கீழும் தொடும் இடங்களும், மேல் விலங்கு கீழ் விலங்குகளும், எழுத்துக்களின் உருவ அளவுகளும் ஒரே அளவில் இருக்கவேண்டும். சொற்களில் எழுத்துக்கும் எழுத்துக்கும்,