பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 தமிழ் பயிற்றும் முறை

வாக்கியத்தில் சொல்லுக்கும் சொல்லுக்கும், ஒரு பக்கத்தில் வரிக்கும் வரிக்கும் விடப்படும் இடைவெளியின் அளவு ஒரே அளவாக இருத்தல்வேண்டும். வரிகோணுதிருத்தலும், தமிழ் எழுத்துக்களைச் சாயாமல் செங்குத்தாக எழுதுதலும் அவசியம் கவனிக்கப்படவேண்டிய கூறுகள் ஆகும்." கடைகளில் கணக்கு எழுதுகின்றவர்களும் பிறரும் எழுத்துக் களுக்கில்லாத சுருள்கொடுத்து எழுதுவதைப் போன்ற பழக்கம் ஏற்படாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இவை எழுத்துக்கு ஒருவித அழகைக் கொடுப்பினும் விரைவைக் கெடுக்கும். -

மாணுக்கர்களின் எழுத்துக்கள் அழகாக அமைவதற்குப் பள்ளிகளில் சில முறைகளை மேற்கொள்ளலாம். அச்சிட்ட பயிற்சிப் புத்தகங்களைப் பார்த்தெழுதப் பழகிய ஒன்றிரண்டு திங்களுக்குப் பிறகு, நாள்தோறும் பார்த்தெழுதும் பயிற்சி தரவேண்டும்; பத்து மணித்துளி அளவு காலம் இதற்குப் போதுமானது. ஒரு முழுப் பாட வேளே தேவை யில்லை." நாள்தோறும் தொடக்கநிலை வகுப்புமானுக்கர்கட்கு பத்து மணித்துளி அளவு கையெழுத்துப் பயிற்சி இன்றி யமையாதது. இதைத் தமிழ்ப்பாட நேரத்தில்தான் எழுத வேண்டும் என்ற வரையறை வேண்டுவதில்லை. எல்லாப் பாடங்களும் தாய்மொழியில் நடைபெறுவதால் இதை எப்பொழுது வேண்டுமானுலும் அளிக்கலாம். மாணுக்கர்களே தத்தம் கையெழுத்துக்களே மதிப்பிட்டுப் பார்க்க வாய்ப்புக்கள் தருவது நன்று. வார இறுதியில் எல்லோருடைய கையெழுத்துத் தாள்களையும் பொருட்காட்சியில் வைத்து அவர்களேயே தரம் பிரிக்கத் தூண்டலாம். முதல் தரம் என்று சிலவற்றைப் பொறுக்கி எடுத்து வகுப்பு விளம்* ஆங்கிலத்தில் வலப்புறமாகச் சாய்த்து எழுதுவதை மேற்கொள்ளுகின்றனர்.

சில தொடக்கநிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு பாட வேளை கையெழுத்திற்கென ஒதுக்கப்பட்டிருப்பது பயனற்றது. இவ்வாறு நீண்டநேரம் எழுதுவது சலிப்பைத் தரும். தவிர, அந்தக்கால அளவும் அதற்குப் போதாது.