பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 3.29.

பரப் பலகையில் வைத்துச் சிறப்பிக்கலாம். சிறந்த கையெழுத்து வகைகளைச் சேர்த்து ஆண்டின் இறுதியில் பள்ளிப் பொருட்காட்சி விழாவில் விளம்பரப் படுத்தவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்றமாதிரி மதிப்பு அளவு அமைத்துக்கொண்டு மாணுக்கர்களின் கையெழுத்தில் அழகு பற்றிய கூறுகளே வளர்க்கலாம். வகுப்புச் சராசரி அளவு மதிப்பு மானுக்கர்களின் முன் இருந்தால் அவர்களின் கையெழுத்தில் ஆண்டுதோறும் முன்னேற்றத்தைக் காணலாம். இவ்விதம் பயிற்சி அளிக்கப்பெற்ருல் ஐந்து ஆண்டுப் படிப்புக்குப் பிறகு அழகும் தெளிவுமுள்ள சிறந்த கையெழுத்து மாணுக்கர்களிடம் அமையும். திட்டமாக ஒரு முறையை அமைத்துக்கொள்ளாது கையெழுத்துச் சீர்படவேண்டும் என்று மட்டிலும் விரும்புவதில் பயன் இல்லை.

நல்ல கையெழுத்தை வளர்க்கும் வழிகள் : தொடக்க நிலைப் பள்ளிகளில் மாணுக்கர்கள் எய்தும் திறன்களில் கையெழுத்து மிகவும் முக்கியமானது. ஆனல், அதை ஒருவரும் சரியாகக் கவனிப்பதில்லை. தமிழ்ப் பாடத்திலன்றி ஏனேய பாடங்களிலும் கையெழுத்தின் தெளிவையும் விரைவையும் அழகையும் வற்புறுத்த வேண்டும். மாணுக்கர்கள் இயல்பாக எழுதும் எல்லாவற்றையும் கவனித்தால், அவர்கள் அவற்றைக் கவனத்துடன் எழுதுவர். நல்ல உரைநடை, பாநடைப் பகுதிகளே எழுதச் செய்தும், சொல்லுவதெழுதலே சில சமயம் மேற்கொண்டும், பார்த்தவற்றை எழுதச் செய்தும் நல்ல கையெழுத்தை வளர்க்கலாம். மாணுக்கர்களின் கையெழுத்தில் காணும் குறைகளே அவர்களைக் கொண்டே திருத்தவேண்டும். சரியாக எழுதாதவர்களே மீட்டும் எழுதச் செய்தும், மிகக் கேடாக எழுதுவோருக்குத் தனியாக வேலை கொடுத்தும் நல்ல கையெழுத்தை வளர்க்கத் துணை செய்யலாம். மாணுக்கர்கள் கையெழுத்தில் தெளிவும் விரைவும் பறிகொடுக்கா திருக்கும்வரை அவர்கள் கையெழுத்தில் காணும் தனித் தன்மையைத் தடுக்கக்கூடாது. விடையேடுகளை மதிப்பிடு.