பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 தமிழ் பயிற்றும் முறை

வதில் கையெழுத்திற்கும் துப்புரவிற்கும் தனியாக மதிப் பெண்களே வழங்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம். மாணுக்கர்களேயே அவரவர்கள் கையெழுத்தைத் தரம் பிரித்துக் காட்டும்படி கூறலாம். இவற்றைப் பொருட்காட்சி விழாவில் வைத்து அவர்களே ஊக்குவிக்கலாம்.

கீழ்வகுப்புக்களில் எழுத்துப் பாடத்திட்டம் : அரசினர் வகுத்துள்ள தொடக்கநிலைப் பள்ளிப் பாடத் திட்டத்தில் அடியிற்கண்டவை கையெழுத்துபற்றிய பாடத்திட்டமாகும்:

முதல் வகுப்பு: குழந்தைகள் தாங்கள் படித்த சொற்களையும் சிறு வாக்கியங்களையும் கரும்பலகை, படம், மின்னட்டை, பிற சாதனங்கள் ஆகியவற்றில் எழுதியிருப்பதைப் பார்த்து அதைப்போல் தாமும் எழுதத் தாராளமாய்ப் பழகுதல்.

இரண்டாம் வகுப்பு: எழுதுகோலைச் சரியான முறையில் பிடிக்கவும், தெளிவாயும் விரைவாயும் எழுதவும் கற்பதை வற்புறுத்தல். படித்த பாடங்களில் வினவப்பெறும் விளுக்களுக்கு ஒவ்வொரு வாக்கியத்தில் விடை எழுதும் திறமையை வளர்த்தல்.

மூன்ரும் வகுப்பு: கையெழுத்தின் தெளிவைக் கெடுக்காமலே விரைவாய் எழுதப் பழகுதல். எழுத்து வேலையில் விரைவும் தெளிவும்தான் முக்கியமாகத் தேவை என்று வற்புறுத்திக்கொண்டே திருத்தமும் அழகும்கூட இன்றியமையாதவை என்று நாடத் தலைப்படுதல். -

பாடப் புத்தகங்களிலிருந்தும் பாடத் திட்டத்திலுள்ள பிற பாடங்களிலிருந்தும் வினவப்பெறும் விளுக்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் விடை எழுதப் பயிற்றுதல்.

இவற்றையொட்டி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கையெழுத்துப் பாடத்திட்டத்தை வகுத்துக்கொண்டு பணி. யாற்றவேண்டும். -