பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 33 É

எழுத்துக் கூட்டல்

ஒருவரின் கல்வியறிவு அவர்கள் எழுதும் எழுத்து வேலையைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது. எழுத்துப் பிழைகளிலிருந்து ஒருவாறு கல்விக்குறைவை அளந்தறிய முடிகின்றது. எனவே, பிழைகளின்றி எழுதுதலே ஆசிரியர்கள் முக்கிய நோக்கமாகக் கொள்ளவேண்டும். எழுத்தில் கவனமற்றிருந்து பிழை செய்தால் அது கல்வியின் பல பிரிவுகளிலும் கவனக் குறைவை உண்டுபண்ணும் ;. படிப்பவர்களுக்கு எதிர்பாராத பொருளையும் தரக்கூடும். எழுத்துப் பிழைகளைக் கவனியாது எழுதினுல் கல்வி :

கலவி யாகும் ; மன்னர் மண்ணர் என்ருகும் ; இறங்கவும் இரங்கவும்’ என்ருகும் ; அறிந்தோர்"

அரிந்தோர்’ என்ருகிவிடும். நாள்தோறும் மாணுக்கர் எழுதுவனவற்றைக் கவனித்தால் எத்தனையோ பிழைகளைக் காணலாம்.

மாணுக்கர் போகட்டும்; அவர்கள் கற்றுக்கொள்ளும் நிலையிலுள்ளனர். வளர்த்தவர்கள் எவ்வாறு எழுதுகின்றனர்? இன்று தமிழ்நாட்டில் எம்மருங்கும் நாம் காணும் பெயர்ப் பலகைகள், விளம்பரங்கள், அரசினர் வெளியிடும் அறிவிப்புகள் முதலியவற்றைக் கவனித்தால் அவர்களால் என்னென்ன பிழைகள் செய்யப்படுகின்றன என்பது தெரியவரும். அகாறணமாய்”, “வண்டி நின்ற பிறகு இரங்கவும்’, ‘சுவற்றில்’, ‘நாகரீகம்’, 'பிருமணுள்' முதலிய பிழை மலிந்த சொற்கள் எங்கும் சாதாரணமாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு பிழைகள் நேரிடுவதற்குக் காரணங்கள் யாவை என ஆராய்ந்தால் இளமைதொட்டே கேட்பதிலும் உச்சரிப்பதிலும் நேரிடும் பிழைகளைக் களையாமையும் கவனக்குறைவும் ஆகும் என்பது தெரியவரும்.

ஆங்கில மொழிபோலன்றித் தமிழ் மொழியில் ஒலி பிறப்பியலுக்கும் எழுத்துக்களுக்கும் மாறுபாடில்லா திருக்