பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக்கூட்டலும் 333.

வாறு (Stimulus) திரும்பத் திரும்ப நடைபெறும் துலங்கல் களுக்கு (Response) வாய்ப்பினேத் தருதல் வேண்டும். கட் புலச்செவிப்புல உட்பதிவுகள் எழுத்துத் தூண்டலாக மாறி சொற்களே நினைவுபடுத்திக்கொள்வதால் பல சொற்களைக் கற்க முடிகின்றது. புலன்களில் கேடுருத குழந்தை ஒரு புதிய சொல்லை இவ்வாறு கற்கின்றது என்று உளவியலறிஞர் கள் கூறுகின்றனர் : சொல்லே முழுப் பொருளாகவே பார்க்கின்றது. பிறகு அதை அசைகளாகவும் எழுத்துக்களாகவும் பிரித்துணர்கின்றது. அதே சமயத்தில் அவற்றை ஒலி வடிவங்களாக மாற்றி வாயில்ை ஒலிக்கின்றது. எழுத்துக் களேயோ அசைகளையோ கண்கள் திரும்பத் திரும்பப்பார்க்கும்பொழுது இப்பகுதிகள் முழுப் பொருள்களுடன் இணைக்கப்பெற்று சொல் மனத்தில் நன்கு இடம்பெறுகின்றது. எழுதும்பொழுது அனைத்தும் வலியுறுகின்றன. எனவே, சொல் வடிவம் மனத்தில் நன்கு அமைய வேண்டுமானுல் குழந்தை அதனைப் பல தடவை எழுத வேண்டும்என்பது பெறப்படுகின்றது. முதிர்ச்சி நிலைக்கேற்றவாறு சொற்களே அடிக்கடிப் பார்ப்பதாலும் கேட்பதாலும் ஒலிப்பதாலும் அவை இயல்பாக மனத்தில் அழுத்தமாகப் பதிகின்றன; ஒவ்வொரு சொல்லிலுமுள்ள எழுத்துக்களேப்பற்றி மனம் சிந்தியாமலே சரியாக எழுத முடிகின்றது.

எல்லாச் சொற்களும் இம்மாதிரி ஒரு பொறி இயக்கம் போல் கற்கப்படுகின்றன என்று சொல்வதற்கில்லை. ஒரு சில சொற்களின் எழுத்துக்கள் தாமாக மனத்தில் பதிவ. தில்லை. அப்பொழுதுதான் புலன்காட்சி நினைவும் இயக்க நினைவும் செயற்படுகின்றன. சொல்லப்பற்றி நாம் எண்ணத் தொடங்குகின்ருேம். சொல்லின் சாயலும் (Image), அச்சொல்லே முதன் முதலாகக் கற்றதும் அச் சொல்லின் இயல்பும் நம் மனத்தில் எழுகின்றன. சிலருக்குக் கட்புலனும் துணை செய்கின்றது. ஒரு சிலர் சொல்லின் சரியான எழுத்துக்களில் ஐயம் நிகழும்பொழுது அச்சொல்லை எழுதிப்பார்த்துச் சரியான எழுத்துக்களே அறுதியிடுவதை நாம் கண்கூடாகக் காண்கின்ருேம். சிலர் சொற்களை