பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் £ #

பாடுகளையும் இன்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை இவ்விலக்கியங்கள் நமக்குக் கற்பிக்கும்.

' நன்ரும்கால் நல்லவாக் காண்பவர் அன்ரும்கால்

அல்லற் படுவது எவன் ? ' "

என்பன போன்ற பொன்மொழிகள் மன அமைதிக்குச் சிறந்த மருந்துபோல் உதவும். பரந்த அறிவையும், விரிந்த நோக்க்த்தையும் நல்கி நம்மைப் புதியதோர் மனிதளுக்கவல்ல இவ்விலக்கிய இன்பத்தை விரும்பாதார் யார்? ஆங்கிலத் திறனுய்வாளர் மாத்யூ ஆர்னல்டு என்பார் கூறியபடி வாழ்க்கையின் திறய்ைவுதானே? இலக்கியம் ? தாய்மொழி இலக்கியங்களேப் படித்துச் சுவைப்பதுபோல் அயல் மொழி இலக்கியங்களேச் சுவைக்கமுடியாது.எனவே, இளமைதொட்டே தாய்மொழிப் பயிற்சி அழுத்தமாக வேண்டப் படுவதொன்று.

கற்பனை யாற்றலையும் முருகுணர்ச்சியையும் வளர்த்தல் : தாய்மொழி இலக்கியங்களைத் துய்ப்பதால் இவை இரண்டும் ஒருவர்பால் தாமாக வளரக்கூடியவை. தாய்மொழியாசிரியர் செய்யுட் பாடங்களைக் கற்பிக்கும்பொழுது இவை நன்கு வளரும் சூழ்நிலைகளே உண்டாக்கலாம். இலக்கியத்திற்குக் கருவூலமாகத் திகழ்வது கற்பனை யாற்றல் : கவிதைக்கு இன்றியமையாததாக வேண்டப்படுவதும் அதுவே. முருகுணர்ச்சி என்பது அழகுள்ள வைகளேத் துய்க்கும் ஒருவகை ஆற்றல் , அழகுள்ளவற்றைப் பொறி கருவியாகக் கொண்டும் துய்க்கலாம் ; கற்பனைச் சிறகு பெற்ற மனத்தாலும் துய்க்கலாம். இலக்கிய ஆசிரியன் புலன்களாலும் கற்பனையாலும் கண்ட வற்றையே அவன் படைத்த இலக்கியங்களைப் படிக்கும்பொழுது நம்மையும் காணச் செய்கின்ருன்.

சங்கச் செய்யுட்கள், கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி போன்ற தீஞ்சுவை மிக்க இலக்கியங்களைப்

குறள்-379.