பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. 32 தமிழ் பயிற்றும் முறை

படிக்கும்பொழுது எண்ணற்ற கற்பனைக் காட்சிகளைக் காண்கின்ருேம் ; அக்காட்சிகளில் தோய்ந்து கிடக்கும் முருகுணர்ச்சியில் நாமும் ஈடுபடுகின்ருேம். எடுத்துக்காட்டாக கற்பனையாற்றலே நம்மிடையே தோற்றுவிக்கும் ஒன்றிரண்டு காட்சிகளைக் காண்போம்.

சாட்டிை கொண்டு பம்பரம்விட்டு விளையாடும் சிறுவர் களே நாம் பார்த்திருக்கின்ருேம். அலகிலா விளையாட்டுடை ஆண்டவன் அண்டங்களை ஆட்டிவைப்பதை இவ் விளையாட்டுக்கு ஒப்புமை காட்டுகின்ருன் ஒரு கவிஞன்.

சாட்டிநிற்கும் அண்டம் எலாம்

சாட்டைஇலாப் பம்பரம்போல் ஆட்டுவிக்கும் குற்ருலத்து

அண்ணலார். "

என்று கூறுவதில் கற்பனைத் திறனைக் க்ாண்க. அண்டங் கள் சுழல்வதையும் பம்பரம் சுழல்வதையும் ஒப்பிட்ட முருகுணர்ச்சியை எண்ணி மகிழ்க.. காலை இளம்பரிதியின் எழிலேக் காட்டும் மற்ருெரு கவிஞன்,

தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேளுக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?

என்று கூறுவதில் பொதிந்துள்ள கற்பனையாற்றலேச் சிந்தித்துக் களிக்க. இதைவிட வேறு எவ்வாறு கூறமுடியும் ?

நீலத் திரைக்கடல் அருகே நின்றுகொண்டு பாரதியார் கதிரவன் மறைவதைக் காண்கின்ருர் , அவர் அப்பொழுது உணர்ந்த உணர்ச்சி விம்மிதங்கொண்டு விரிகின்றது பாஞ்சாலி சபத'த்தில்; அர்ச்சுனன் வாய்மொழியாக அவர் கண்ட காட்சியைக் கூறுகின்ருர், பாண்டவர்கள் விதுரன் மூலம் துரியோதனன் அனுப்பிய அழைப்பைப் பெற்று

' குற்ருலக் குறவஞ்சி-செய் 107. பாரதி : குயில்.