பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

தமிழ் பயிற்றும் முறை

5. லகர - ழகர - ளகர வேறுபாடுகள்

இலை - தழை இழை - நூற்கிற நூல் இளை - மெலி, வேலி

உலவு - உலாத்து உழவு - பயிர்த்தொழில் உளவு - வேவு, இரகசியம்

உலை - கொல்லனுலை, நீருலை உழை - பக்கம், மான் உளை - பிடரிமயிர், சேறு

ஒலி - சத்தம் ஒழி - நீக்கு ஒளி - பிரகாசம்

கலி - ஒலி, ஓர்யுகம் கழி - நீக்கு, உப்பங்கழி களி - மகிழ்ச்சி

கலே - ஆண்மான், மேகலை கழை - கரும்பு, மூங்கில் களே - அயர்வு

கிலி - பயம் கிழி - கிழி(த்தல்) கிளி - கிளிப்பிள்ளை

தலை - சிரசு

தழை - இலை தளை - விலங்கு, கட்டு

வலி - நோவு, வலிமை வழி - பாதை வளி - காற்று

விழி - கண் விளி - ஓசை; அழை