பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 353

மாணுக்கர்களைத் தமிழ் மொழியாசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும். இதற்கு ஆங்கில உரைநடை யிலக்கணத்தை யொட்டிய தமிழ்மொழிப் பயிற்சிகள் பெரிதும் துணையாக இருக்கும். நடை முறையிலிருக்கும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இத்தகைய மொழிப்பயிற்சிகள் சேர்க்கப்பெற்றுள்ளன. இவ்விதப் பயிற்சிகள் முதல் வகுப்பிலிருந்தே தரப்பெற்ருல் மானுக்கர் இக்கால, பிற்கால வாழ்க்கையில் பயனளிக்கத்தக்க மொழியறிவினைப் பெற்றுத் திகழ்வர் என்பதில் ஐயமில்லை. நல்ல விதமாக மொழிப்பயிற்சிகள் அளிக்கப்பெற்ருல் மாணுக்கர்கள் இக்காலத்திலும் பிற்காலத்திலும் எழுதும் கட்டுரைகள், கதைகள் போன்றவை நல்ல நடையுடனும் வழுக்களின்றியும் அமையும்.

சில வகை மொழிப்பயிற்சிகள்: மொழிப்பயிற்சிகள் எல்லா வற்றையும் இங்கு விரிவாகக் கூற முடியாது ; எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுவதென்பதும் இயலாத செயல். ஆசிரியரின் அறிவுத் திறனுக்கேற்றவாறு எத்தனையோ விதமான பயிற்சிகளே உண்டாக்கலாம். ஒரு சிலவகைப் பயிற்சிகளை மட்டிலும் ஈண்டு நோக்குவோம்.

1. எழுத்துக்கள்பற்றியவை

ஒரு வகையான பயிற்சி பல எழுத்துக்களேக் கலந்து கொடுத்து அவற்றிலிருந்து சொற்களாகச் செய்தலாகும்.

(எ - டு) சுமந்த சோரம் (சோமசுந்தரம்)

மப்ரவேபம் (வேப்பமரம்) ரைதிகு (குதி)ை ண்ணிதர் (தண்ணிர்)

என்பன போன்றவை.

இன்னெருவகையான பயிற்சி விட்ட எழுத்துக்களைச் சேர்த்துப் படிக்கச் செய்தல்.

த-24