பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 357

3. வாக்கியங்கள்பற்றியவை

இவற்றிலும் பலவகையான பயிற்சிகள் உள்ளன. ஒரு சிலவற்றை ஈண்டு நோக்குவோம்.

ஒரு வகையான பயிற்சி வாக்கியத்தின் சொற்களே ஒழுங்கு மாற்றிக் கொடுத்து அதை ஒழுங்காக அமைக்கச் செய்தல்.

(or-9) பின்வரும் சொற்களைத் தக்கபடி மாற்றிச்

i.

2.

3.

4.

5.

சரியான வாக்கியமாக எழுதுக. வாழை தொங்குகிறது குலை மரத்தில். இட்டிலி குடித்தான் நீர்மோர் தின்று. தனபாலன் வந்தான் ஒருவளர்த்து நாயை. புல் பசித்தால் புலி தின்னுமா? இந்த இருக்கிறது கிளை நீளமாக மரத்தின்.

மற்ருெரு வகையான பயிற்சி ஒரு வாக்கியத்தில் சில சொற்களே விட்டு எழுதி அவற்றை நிரப்பும்படி சொல்லுதல்.

1.

భ;

و شیعہ

3.

5.

தயிரைக் வெண்ணெய்

ஆயிரம் பேரைக் அரை மருத்துவன்.

ஆறு நிறைய - போனுலும் நக்கித்தான்

வேண்டும்,

கடிகாரத்தின் சிறிய முள் - பெரிய முள் - காட்டும்.

புலி - யின் இனத்தைச் சேர்ந்தது.

இந்தப் பயிற்சியையே சற்று மாற்றி வேறு விதமாகவும் கொடுக்கலாம்.

(எ-டு) பிறைக்குறிகளுக்குள்ளிருக்கும் சொற்களில்

தகுதியானவற்றைக் கோடிட்ட இடத்தில் எடுத்து எழுதுக.