பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 359

அச்செய்தியை அவன் தாய் செவியுற்ருள். அவள் மிக மகிழ்ந்தாள். : வாக்கியங்களை ஒன்று சேர்ப்பதில் எத்தனையோ வகைப்பயிற்சிகள் உள்ளன. அவற்றை அவற்றிற்கென எழுதப்பெற்றுள்ள நூல்களில் கண்டு கொள்க. 3.

வாக்கியப் பொருத்தம் : வாக்கியங்களில் எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் பொருத்த முடையனவாக இருத்தல் வேண்டும். அஃதாவது, எழுவாய் உயர்திணையாக இருந்தால் பயனிலையும் உயர்திணையில் இருத்தல் வேண்டும். எழுவாய் ஆண் பாலாயிருந்தால் பயனிலையும் ஆண்பாலாயிருத்தல் வேண்டும். எழுவாய் ஒருமையாயிருந்தால் பயனிலையும் ஒருமையாய் இருத்தல் வேண்டும்.

ஒருவரை உயர்வு குறித்துப் பலர்பால் சொல்லில் வழங்குதல் உண்டு. அவ்விடத்தில் பயனிலையும் பலர்பால் சொல்லாகவே இருத்தல் வேண்டும்.

(எ-டு) விவேகானந்தர் சர்வமத மகாசபையில் இந்து

சமயத்தைக் குறித்துப் பேசினர். இனி, எழுவாய் ஒருமையாயிருப்பினும் சிறப்பு கருதி பயனிலையைப் பன்மையாக வழங்குதல் உண்டு. இவ்வழக்கு அடியவர், கடவுளர் இவர்களைக் குறித்ததே.

(எ-டு) மாதொரு பாக ரன்பின்

வழிவரு மலாடர் கோமான் காதலால் ஈசர்க் கன்பர்

கருத்தறிந் தேவல் செய்வார் இங்கு, கோமான் என்னும் ஒருமைப் பெயர்க்குச் செய்வார் என்னும் பன்மைச் சொல் பயனிலையாய் வந்துள்ளமை காண்க. இவ்வாறே பெருமான்' பிரான்’ என்ற சொற்களும் பன்மைப் பயனிலை பெறுதல் உண்டு. (எ-டு.) சிவபெருமான் அசரீரியாய்க் கூறியருளிஞர்.

' என்றுரைத்துக் கரந்தனர் எம்பிரான்”