பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 0. தமிழ் பயிற்றும் முறை

4. சொந்த வாக்கியங்களில் அமைத்தல்

ஆழ்ந்த படிப்பில் கண்ணுறும் சொற்கள், சொற்ருெடர்கள், மரபுத் தொடர்கள், உவமைகள், பழமொழிகள் ஆகியவற்றை மாணுக்கர்கள் தம் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுதும் பயிற்சிகளையும் மொழிப் பயிற்சிகளாகக் கருதலாம். தொடக்கநிலைப் பள்ளியிலிருந்தே சொற்கள், சொற்ருெடர்கள் முதலியவற்றை மாணுக்கர்கள் தம் வாக்கில் வைத்தெழுதும் பயிற்சிகளேத் தொடங்கிப் படிப்படியாக வகுப்பு உயர உயர பல்வேறு பயிற்சிகளேயும் தரலாம்.

சொற்கள் : தொலைவு, வெப்பம், இடையில், அமைத்து, இன்பமாக, அறிஞர் போன்ற சாதாரண சொற்கள் கீழ் வகுப்புப் பாடங்களிலேயே காணப்பெறும். அவை போன்ற சொற்களே, சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுதும் பயிற்சிகளேத் தரலாம். .

சொற்ருெடர்கள் : இரவும் பகலும், குறிப்பிட்ட, செய்யாவிட்டால், நாடெங்கும், இயலவில்லே, ஆயிரக்கணக்காய், ஒருவாறு, காலப்போக்கில் என்பன போன்ற சாதாரணச் சொற்ருெடர்களைத் தொடக்கநிலைப் பள்ளிப் பாடங்களிலேயே மாணுக்கர்கள் காண்பர். இவைபோன்ற சொற்ருெடர்களையும் மாளுக்கர் தம் வாக்கில் வைத்து வழங்கும் பயிற்சிகளைத் தருதல் வேண்டும்.

இவற்றைத் தவிர, வேறு சில சொற்ருெடர்கள் உள். அவற்றிலுள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பொருள் கொள்ளுதல் ஆகாது. அவற்றை அப்படியேதான் வழங்குதல் வேண்டும். அவற்றை வாக்கியங்களில் வைத்தெழுதும் பயிற்சிகளைத் தரலாம்.

(எ-டு) கண்ணும் கருத்துமாக, அழுதகண்ணும் சிந்திய மூக்கும், எலும்புந்தோலுமாய், இடம் பொருள் ஏவல் என்பன போன்றவை

மரபுத் தொடர்கள். தமிழ் மொழிக்கே உரிய மரபுத் தொடர்கள் ஏராளமாக உள. அவை இலக்கண வரம்புக்கு உட்படாதவை.