பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 36 1

(எ-டு.) இருதலை மணியன், கச்சை கட்டுதல், தோன் ருத் துணை, ஆழம் பார்த்தல், ஒட்டைவாய், குடிமுழுகிப்போதல் என்பன போன்றவை மரபுத் தொடர்புகள். இவை போன்றவற்றை வாக்கியத்தில் வைத்து வழங்கும் பயிற்சிகளைத் தரலாம்.

உவமைகள் : உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வழங்கக்கூடிய எத்தனேயோ உவமைகள் தமிழ் மொழியில் உள்ளன. பொருள்நயம் பொலிந்து விளங்குமாறு உரைநடை எழுத விரும்புவார்க்கும் கேட்டார் பிணிக்கும் வகையில் பேச விழைவார்க்கும் இவை பெரிதும் பயன்படும்.

(எ-டு.) அகலாது அணுகாது தீக்காய்வார்போல, அச்சில்லாத தேர்போல, அனேகடந்த வெள்ளம்போல், அடிவயிற்றில் இடிவிழுந்ததுபோல, அற்றகுளத்து அறுநீர்ப் பறவைபோல், ஆற்றில் கரைத்த புளிபோல், உலக்கைக் கொழுந்துபோல, எரிப்படு பஞ்சுபோல், கு குடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல, இருதலைக் கொள்ளி எறும்புபோல, உள்ளங்கை நெல்லிக்கனிபோல, ஊமையன் கண்ட கனவு போல, சிவபூசையில் கரடி புகுந்தது போல என்பன போன்ற உவமைகளே வாக்கில் வைத்து வழங்கும் பயிற்சிகளைத் தரலாம்.

பழ மொழிகள் : மாணுக்கர்கள் கட்டுரைகள் எழுதுங்கால் இடம் நோக்கி அமைத்து எழுதக் கூடிய பழமொழிகள் நம் தமிழ் மொழியில் எண்ணிறந்தவை உள்ளன.

(எ.டு.) கரைப்பார் கரைத்தால் கல்லுங் கரையும்.'

கண்டது கற்கப் பண்டிதனுவான் ’ நொண்டிக் குதிசைக்கு சறுக்கினது சாக்கு." " துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.'

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.” - சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுத

வேண்டும்.” சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்காலளவு."