பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 தமிழ் பயிற்றும் முறை

மடியிலே தனம் இருந்தால் வழியிலே பயம்.” * வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு."

என்பன போன்ற பழமொழிகளை வாக்கியங்களில் வைத். தெழுதும் பயிற்சிகளைத் தரலாம்.

5. பல்வகை வாக்கியவடிவு மாற்றங்கள்

ஒரு வாக்கியத்தின் பொருளே மாற்ருமலேயே அதன் வடிவை மாற்றுவது வாக்கிய வடிவு மாற்றம் ஆகும். வாக்கிய வடிவு மாற்றங்களில் பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஒரு சிலவற்றை ஈண்டு நோக்குவோம்.

(1) செய்வினை செயப்பாட்டுவினைப் பரிமாற்றம்.

(எ-டு.) செய்வினை : கரிகாலன் காவிரிக்குக் கரைகட்டிஞன். செயப்பாட்டுவினை : கரிகாலனுற் காவிரிக்குக் கரை

கட்டப்பட்டது. (2) உடன்பாட்டு வினை எதிர்மறை வினேப் பரிமாற்றம்.

(எ-டு.) உடன்பாடு : பாரதம் இராமாயணத்திற்குப் பிந்தியது.

எதிர்மறை : பாரதம் இராமாயணத்திற்கு முந்திய

தன்று.

(8) விளுவாக்கியச் சாற்றுவாக்கியப் பரிமாற்றம்.

(எ-டு.) வினு நீ சொன்னபடி யெல்லாம் செய்வதற்கு நான்

உன் அடிமையா? சாற்று ! நீ சொன்னபடி யெல்லாம் செய்வதற்கு

நான் உன் அடிமையல்லேன்.