பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 தமிழ் பயிற்றும் முறை

(11) தலைமைக் கிளவியச் சார்புக் கிளவியப் பரிமாற்றம்.

(எ-டு) தலைச் சங்க மிருந்த தென் மதுரை இன்று கடலுள் முழுகிக் கிடக்கின்றது. இன்று கடலுள் முழுகிக் கிடக்கின்ற தென் மதுரையில் தலைச்சங்க மிருந்தது. வீடு வெந்த பின்பு நெருப்பணைக்கும் பொறி வந்தது. நெருப்பணைக்கும் பொறி வருமுன் வீடு வெந்து விட்டது. (12) நேர் கூற்றும் நேரல் கூற்றும் : ஒருவர் கூற்றை அவர் கூறியபடியே ஒரு சொல்லேயும் மாற்ருது தன்மை யிடத்திற் கேற்பக் கூறுவது நேர்கூற்று (Direct speech) ஆகும் ; அதைப் பொருள் மாற்ருது ஆங்காங்கு சொல். மாற்றிப் படர்க்கையிடத்திற் கேற்பக் கூறுவது நேரல் கூற்று (Indirect speech) ஆகும். நேராகக் கூறப்படுவது நேர் கூற்று ; நேரல்லாமற் கூறப்படுவது நேரல் கூற்று. இவை முறையே தற்கூற்று, அயற்கூற்று எனவும் வழங்கப்பெறும். - நேர் கூற்று என்ருன், என்று சொன்னன்,' எனச் சொன்னன்’ என்பன போன்ற சொற்ருெடர்களுள் ஒன்ருல் முடிக்கப் பெறும் ; நேரல் கூற்று ஆகச் சொன் ஞன், என்ப தாகச் சொன்னன்,' என்று சொன்னன்’ என்பன போன்ற

சொற்ருெடர்களுள் ஒன்ருல்-முடிக்கப்பெறும். (எ-டு) 1. கோவலன் கண்ணகியை நோக்கி, ' நான் பொருள் சம்பாதிக்க மதுரைக்குப் போகின்றேன்’ என்று சோன்னன். 2. கண்ணகி, ' நானும் தங்களோடு வருகின் றேன்” என்று கோவலனிடம் சொன்னுள். இந்த இரண்டு வாக்கியங்களிலும் கோவலனும் கண்ணகியும் கூறிய துணைநிலை வாக்கியங்கள் மேற்கோள் குறியிட்டுக் காட்டப்பெற்றுள்ளன. இவ்வாறு ஒருவர் கூறுபவற்றை அப்படியே கூறுவது நேர்கூற்று ஆகும். மேற்கூறப்பட்ட வாக்கியங்களேயே அடியிற்கண்டவாறு மாற்றிக் கூறலாம்.