பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ί 4 தமிழ் பயிற்றும் முறை

வலக மக்கள் காதற் கொள்ளேயில் இறந்து விடுவார்களாம். மற்றும், கவிஞனுக்குச் சந்திரன் சோலையிலே பூத்த தனிப்பூவாகவும், சொக்கவெள்ளிப் பாற்குடமாகவும், , அமுத ஊற்ருகவும், காலையில் தோன்றிய கதிரவன் கடலில் மூழ்கி எழுந்ததால் குளிரடைந்த ஒளிப் பிழம்பாகவும் காட்சி

அளிக்கின்ருன்.

சங்க இலக்கியங்களிலிருந்து தற்காலத்தில் தோன்றி வரும் இலக்கியங்கள் வரை உள்ள தமிழ் இலக்கியங்களில் இத்தகைய காட்சிகளைத் தம்மகத்தே கொண்டுள்ள பாடல்கள் எண்ணற்றவை காணப்படுகின்றன. தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணுக்கரின் அறிவுநிலை, பட்டறிவு முதலியவற்றிற் கேற்றவாறு அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்பிக்கவேண்டும். அவற்றைக் கற்பிக்கும்பொழுதே கற்பனையாற்றலேயும் முருகுணர்ச்சியையும் எடுத்துக் காட்ட வேண்டும்; கற்பனையாற்றலுக்கு அடிப்படை உள்ளத்தில் படிந்துகிடக்கும் உணர்ச்சியே. உணர்ச்சியும் கற்பனையும் ஒன்றையொன்று பின்னிக் கிடக்கும் ; ஒன்று குறைந்தாலும் அதற்கேற்றவாறு பிறிதொன்றன் ஆற்றல் குறைந்துவிடும். சிந்தனையும் காட்சித்திறனும் கலந்து உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் இக் கற்பனையாற்றல் உயர்ந்த கவிஞர்களிடம் காணப்படும் ஒர் அருளாற்றல். இத்தகைய ஆற்றல் பொதிந்துள்ள பாடல்களைக் கற்பிக்கும்பொழுது மாணுக்கர்களிடம் மெய்மறந்து பாட்டுக்களைத் துய்க்கும் ஆற்றலை உண்டாக்கிவிட்டால், அவர்களிடம் அது வளர்வதுடன் அவர்களாகவே பல இலக்கியங்களேப் படித்துத் துய்க்கும் திறமையையும் பெறுவர். தாய்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் இதை நோக்கமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

வழிவழி வரும் சமூக இயலையும் பண்பாட்டையும் அறியும் திறவுகோல் : எல்லா மொழிகளிலுமே அம்மொழி பேசுகின் றவர்களின் பண்டைச் சமுதாய வாழ்வையும் பண்பாட்டையும் அறிவதற்குரிய நூல்கள் இருக்கும்; பெரும்பாலும்