பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 367

1. கோவலன் கண்ணகியை நோக்கித் தான் பொருள் சம்பாதிக்க மதுரைக்குப் போவதாகச் சொன்னன். 2. கண்ணகி தானும் அவளுேடு வருவதாகச்

சொன்னுள். இந்த வாக்கியங்களில் கோவலனும் கண்ணகியும் கூறிய சொற்களே அவர்கள் கூறியவாறே கூருமல் அவற்றின் கருத்துக் கூறப்பெற்றுள்ளது. இவ்வாறு ஒருவர் கூறும் சொற்களே அப்படியே கூருமல், கருத்துமட்டும் மாருதபடி கூறுவது நேரல் கூற்று எனப்படும்.

நேர்கூற்றை நேரல் கூற்ருக மாற்றுவதில் சில விதிகள் உள்ளன. அவற்றை ஈண்டுக் கவனிப்போம்.

(அ) தன்மைப் பெயர் முதலியவற்றில் மாறுபாடு.

(i) தன்மைப் பெயர்.

(எ-டு.) . நேர்: நான் நான் பரிசு பெற்றேன்” என்றேன். நேரல் : நான் பரிசு பெற்றதாக நான் கூறினேன்.

2. நேர் : நீ நான் பரிசு பெற்றேன்” என்ருய். நேரல் நீ பரிசு பெற்றதாக நீ கூறிஞய்.

(தமிழ் மொழியில் வினைமுற்றுச் சொல்லே எழுவாயைத் தன் விகுதியால் அறிவித்து விடுமாதலின், மேல் நேரல் கூற்றுக்களின் இறுதியிலுள்ள நான், நீ என்பவை மிகையாகும். அவையின்றியே எழுதலாம். நேர் கூற்றில் உள்ள தன்மைப் பெயர் பன்மையாயிருப்பின், நேரல் கூற்றி. லும் அவ்வாறு அமைக்க வேண்டும்.)

3. நேர்: கோவிந்தன் நான் பரிசு பெற்றேன்”

என்ருன். நேரல்: கோவிநதன் தான் பரிசு பெற்றதாகக் கூறினன். (பிற பால்களிலும் இவ்வாறு அமைத்துக் கொள்க.)