பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868 தமிழ் பயிற்றும் முறை

மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து நேர் கூற்றில் துணைநிலை வாக்கியத்திலுள்ள தன்மைப் பெயரை, முதன்மை வாக்கியத்திலுள்ள எழுவாய் எந்த இடத்தைச் சார்ந்ததோ அந்த இடத்துப் பெயராக நேரல் கூற்றில் மாற்றியமைக்க வேண்டும் என்பது அறியலாகும்.

(இங்ஙனமே படர் க்கைப் பொதுப்பெயர்-தான், தாம் என்பனவே என்றும், அவன், அவள், அவர், அது, அவை என்பன சுட்டுப் பெயர் கனே என்றும் அறிக..}

(ii) முன்னிலைப் பெயர் (எ-டு.) 1. நேர் : தந்தையார், " நீ பள்ளிக்குப் போக

வேண்டும் ' என்று என்னிடம் கூறிஞர். நேரல் : தந்தையார் நான் பள்ளிக்குப் போக வேண்டியதாக என்னிடம் கூறிஞர்.

2. நேர் : தந்தையார். " நீ பள்ளிக்குப் போக

வேண்டும் ' என்று உன்னிடம் கூறிஞர். நேரல் தந்தையார் நீ பள்ளிக்குப்போக வேண்டியதாக உன்னிடம் கூறிஞர்.

3. நேர் : தந்தையார், "நீ பள்ளிக்குப் போக வேண்டும் ” என்று மாதவனிடம் கூறிஞர். நேரல் தந்தையார் மாதவன் பள்ளிக்குப் போகவேண்டியதாக அவனிடம் கூறிஞர்,

(இந்த எடுத்துக்காட்டுகளில் நேர் கூற்றில் உள்ள துணைநிலை வாக்கியத்தில் காணப்பெறும் முன்னிலே இடப் பெயரை அச் செய்தி கூறப்படும் பொருளின் இடப் பெயராக நேரல் கூற்றில் மாற்றியமைத்துள்ளமை காண்க, ஒருமை பன்மை பால்களுக்கு ஏற்றவாறு தவறுபடாமல் அமைக்க வேண்டும்.

நேர் கூற்றில் உள்ள முதன்மை வாக்கியத்தில் காணப்படும் படர்க்கைப் பெயர்கள் நேரல் கூற்றிலும் மாருமல் இருக்கும்.!