பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 தமிழ் பயிற்றும் முறை

(இ) சில சொற்களை மாற்றும் முறை

(எ-டு) நேர் : “இன்று இங்குத் தங்கி நாளைக்குக் காசிக்குச்

செல்வேன் ’ என்ருன் வரதன். நேரல் வரதன் அன்று அங்குத் தங்கி மறுநாள் காசிக்குச் செல்வதாகக் கூறினன்.

இவ்வாக்கியத்தில் இன்று என்பதை அன்று என்றும், இங்கு என்பதை அங்கு என்றும், நாளே என்பதை மறுநாள் என்றும் நேரல்கூற்றில் மாற்றி யிருப்பதைக் காண்க. இவைபோல, நேர் கூற்றில் உள்ள அண்மையும் நிகழ்காலமும் குறிக்கும் இடைச் சொற்கள் முதலியவற்றை நேரல் கூற்றில் சேய்மையும் இறந்த காலமும் குறிப்பவையாக மாற்ற வேண்டும். அவற்றுள் சில: இது - அது இவை-அவை; இன்று- அன்று; இன்றிரவு - அன்றிரவு இப்பொழுது - அப்பொழுது இங்கு அங்கு இதல்ை - அதனுல்; நாஜன. மறுநாள் ; நேற்று - முதல்நாள், முன்நாள்.

நடுநிலை உயர்நிலை வகுப்பு மானுக்கர்களுக்கு நேர் கூற்றை நேரல் கூற்ருகவும், நேரல் கூற்றை நேர்கூற்ருகவும் மாற்றும் மொழிப்பயிற்சிகளைத் தரலாம்.

6. பலவகையான பிழைதிருத்தங்கள்பற்றியவை

இவற்றில் பலவித பயிற்சிகள் உள்ளன. ஒரு சில வற்றைமட்டிலும் ஈண்டுக் கவனிப்போம்.

(1) சொற்கள்பற்றியவை : சில சொற்கள் உலக வழக்கில் தவருக வழங்குகின்றன. சில சொற்கள் குறைவான கல்வி யுடையவர்களால் தவருக எழுதப்பெறுகின்றன. சில வடமொழிச் சொற்களும் தவருகவே எழுதப்பெறுகின்றன. இப்படிப்பட்ட பிழைகளைத் திருத்தி எழுதும்படி பயிற்சிகள் தரலாம்.