பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 தமிழ் பயிற்றும் முறை

இவ்வாக்கியத்தில் முயற்சிக்கின்றேன்’ என்பது தவறு. முயல்கின்றேன் முயற்சி செய்கின்றேன்’ என்று எழுதுதல் வேண்டும்.

3. தங்கள் நலனைத் தெரிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன் ?

இவ்வாக்கியம், தங்கள் நலனைத் தெரிவிக்க வேண்டு கின்றேன்’ என்று இருத்தல் வேண்டும்.

4. அவைகளை (ஆறு பொறிகளை)ச் சரவணப் பொய் கையையிலிட்டு வளர்ந்து வருநாளில் அம்பிகையால் அவை: யொருங்கே எடுக்கப்பட அவை ஒருடல் பெறலாயின.

இவ்வாக்கியம் அவை சரவணப் பொய்கையிலிடப் பட்டு வளர்ந்து வருகாளில் அவற்றை அம்பிகை ஒருங்கே எடுக்க, அவை ஒருடலாய் அமைந்தன என்றிருப்பின் அமைதியாகும்.

(iii) வழுவமைதிகள் : வாக்கியப் பிழைகளையும் அவற்றின் திருத்தங்களேயும் மேலே கண்டோம். இங்கு, வாக்கியங்களில் வழுவாயிருப்பனவும் யாதேனும் ஒரு காரணம்பற்றி அமைத்துக் கொள்ளப்படும். அப்படி வருவதற்கு வழுவமைதி என்று பெயர்.

(எ-டு) 1. " மதுரையைச் சேர்ந்த பகைவர் படைகளைப் பாண்டியன் படைகள் வீரத்தோடு தாக்கின”.

இவ்வாக்கியத்தில், போர்வீரர்களாகிய உயர்திணை யைப் படைகள் என்று அஃறிணைச்சொல் ஆக்கினதானதால், தாக்கின என்னும் அஃறிணைவினை அமைதியாயிற்று.

(எ-டு.) 2. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” இவ்வாக்கியத்தில் மூர்க்கன் என்னும் உயர்திக்ணப் பெயருக்கு இழிவுபற்றி அஃறிணை முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.