பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 375

இனி, காலமும் வழுவமைதியாய் வரும்.

'உண்கின்ற ஒருவன், தன்னை அழைப்பவனை நோக்கி, 'உண்டேன்; வந்துவிட்டேன்’ என்பான்.

இதில் விரைவில்ை நிகழ்காலம் இறந்த காலம் ஆயிற்று.

இவைபற்றிய விவரங்களை ந ன் னு லி ல் விரிவாகக் காண்க."

7. கிறுத்தற்குறிகளை ஏற்ற இடங்களில் இடுதல்

அச்சிட்ட அல்லது கையால் எழுதப்பெற்ற படிகளைப் படிக்கும்பொழுதே அவை குறிக்கும் பொருளைத் தெளிவாக அறிந்துகொள்ளுவதற்காக வாக்கியங்களில் இடப்பெறும் அடையாளங்களே நிறுத்தற் குறிகள் (Marks of punctuation) என்று வழங்குவர். அவற்றை இடும்பொழுது இடம் நோக்கி இடுதல் வேண்டும். இவ்வாறு இடும் பயிற்சியை மூன்ரும் வகுப்பிலிருந்தே படிப்படியாகக் கற்பிக்கலாம். நிறுத்தற்குறிகள் சரியாக இடப்பெற்ருல் கருத்துணர்தல் எளிதாக இருக்கும். எனவே, எழுதுவோரும் படிப்போரும். அக் குறிகளே நன்கு கவனித்தல் வேண்டும்.

பன்னெடுங்காலமாகவே இவ்வாறு ஒருவித குறிகளே இடும் பழக்கம் மேல்நாடுகளில் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. நந்தமிழ் மொழியைப் பொறுத்தமட்டிலும் இவை என்றுமே இருந்ததில்லை எனக் கூறலாம். பைலேன்டியம் நகரிலிருந்த அரிஸ்டோபேன்ஸ் என்பார் கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலேயே ஒருவித குறியீடுகளைக் கண்டறிந்ததாக அறியக்கிடக்கின்றது. இதற்கும் முன்னதாகவே கிரேக்க நாட்டில் இவை வழங்கின என்பதைக் கிரேக்கக் கையெழுத்துப் படிகளிலிருந்து அறிகின்ருேம். என்ன

நூற்பாக்கள்-377, 378, 380, 382, 388, 384, 392, 398, 400, 403.