பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 தமிழ் பயிற்றும் முறை

காரணத்தாலோ அவை வழக்காறின்றி அழிந்துபட்டன. இடைக்காலத்தில் இவைபற்றிய ஒர் ஒழுங்கான திட்டமே இருந்ததாகத் தெரியவில்லே. இன்று வழக்கிலிருக்கும் குறியீடுகளே ஆல்டஸ் மெனுவியஸ் (Aidus Menutius) என்ற வெனிஸ் நகரத்து அச்சிடுவோர் ஒருவர் முதன் முதலாகக் கையாண்டார் ; பதினேந்தாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் நிறுவப்பெற்ற புகழ்பெற்ற ஆல்டைன் அச்சகத்தில் இக்குறியீடுகள் முதன்முதலாக வழங்கப்பெற்றன.

நிறுத்தற்குறிகள் படிப்போர் எவ்விடத்தில் நிறுத்திப்படிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. வாய்க்குள்படித்தாலும் சரி, வாய்விட்டுப் படித்தாலும் சரி கண்ணும் கண்டமும் அடிக்கடி ஓய்வை நாடுகின்றன ; நிறுத்தற் குறிகள் பொருள்மாற்றமின்றியும், கருத்தின் அழுத்தமாறு பாடின்றியும் எந்த இடங்களில் எப்படி நின்று மேலே செல்லவேண்டும் என்பதை உணர்த்துகின்றன. சாலையில் செல்வோருக்குச் சாலே அடையாளங்கள் பயன்படுவன போல, இவைப் படிப்போருக்குப் பயன்படுகின்றன.

முற்றுப்புள்ளி (), காற்புள்ளி (,), அரைப்புள்ளி (;), முக்காற்புள்ளி (:), விளுக்குறி (?), உணர்ச்சிக்குறி (!), அடைப்புக்கள் (Brackets), கீற்று (Dash), தொகைக்குறி (Apostrophe), är(5â46É1â6ir (Abbreviations) (yi 355ôuuவற்றை இடும் இடங்களே மாளுக்கர்கட்குத் தொடக்கத்திலிருந்தே கற்பித்தல் வேண்டும். இவற்றை அவர்கள் வயதுநில அறிவு நிலை ஆகியவற்றிற் கேற்றவாறு கற்பிக்கலாம். தமிழ் உரை நடைக்கு இவை மிகவும் இன்றியமையாதவை. கீழ் வகுப்புக்களிலிருந்தே இத்தகைய நிறுத்தற் குறிகளே ஏற்ற இடங்களில் இடும் பயிற்சிகளைத் தருதல்வேண்டும்.

8. பிறவகைப் பயிற்சிகள்

மேலே குறிப்பிட்ட தலைப்புக்களில் அடங்காத ஒரு சில பயிற்சிகள் உள்ளன. அவற்றையும் நோக்குவோம்.