பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கீள் 15

அவை இலக்கியமாகவும் வரலாற்று நூல்களாகவும் திகழும். ஆனால், தமிழில் வாழ்வை அடிப்படையாகக்கொண்ட இலக்கண நூல் இருப்பது அம்மொழியின் தனிச் சிறப்பாகும் ; வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்துக் காட்டிய பெருமை தமிழனுடையது. இவ்வுலகில் எம்மொழியிலு மிராத பெருமை தமிழ் மொழியில் காணப்படு கின்றது. புறநானூறு, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து புண்டைத் தமிழர்களின் சமூக வாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்துகொள்ளலாமென்ருலும் "இப்படித்தான் குறிக்கோள் வாழ்க்கை அமையவேண்டும்.” என்று தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் திட்டமான குறிப்புக்கள் காணப்பெறுகின்றன. தமிழர்கள் வாழ்க்கையை அகவாழ்க்கை என்றும், புறவாழ்க்கை என்றும் இரு கூறிட்டுப் பேசுவர் ; வாழ்க்கையின் குறிக்கோட் பொருளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பகுதிகளில் இன்டத்தை அகத்திலும் ஏனேய மூன்றனேப் புறத்திலும் அடக்கினர். காதலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை அகப்பொருள் என்றும், போர், கொடை, நட்பு போன்ற பற்றை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையைப் புறப்பொருள் என்றும் இலக்கியங்களில் பிரித்துப் பேசப்படும். காதலையும் போரையும் கலேயாக உயர்த்திய பெருமை தமிழர்களுடையது. அகப்பொருள், குடும்ப வாழ்க்கையைப்பற்றியது ; உணர்ச்சியைத் தலைமையாகக் கொண்டு தனி வாழ்க்கையின் பல்வேறு இயல்புகளேப்பற்றிப் பகு துப் பேசுவது. புறப்பொருள், உலக வாழ்க்கையாகிய பொது வாழ்க்கையைப்பற்றியது ; செயலே அடிப்படையாகக்கொண்டு உலக வாழ்க்கையின் பல்வேறு துறைகளேப் பகுத்துப் பேசுவது.

இன்பத்தை நல்கும் காமத்தை மூன்று பிரிவாகப் பிரித்து இலக்கண நூலார் வகைப்படுத்தியுள்ளனர். ஆடவரிலோ மகளிரிலோ யாரேனும் ஒருவர் மாத்திரம் மற்ருெருவர்மீது காதல் கொள்வதாகச் சொல்வது ஒரு வகை ; இது கைக்கிளே’ எனப்படும். வலிய இன்பம்