பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 377

(i) இடம் விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும்: கட்டுரை முதலியவற்றைப் படிப்பவர், படிக்கும்பொழுதே பொருளே நன்கு அறிந்து கொள்ளும்படி தெளிவாக எழுதுதல் வேண்டும். அவ்வாறு எழுதும்பொழுது இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் கவனித்தற்கு உரியவை. ஒரு வரிக்கும் மற்ருெரு வரிக்கும் இடையே இடம் விடுதல் வேண்டும் , அவ்வாறே வரிகளில் ஒரு சொல்லுக்கும் மற்ருெரு சொல்லுக்கும் இடையே சிறிது இடம் விடுதல் வேண்டும் ; சொல்லினுள் எழுத்திற்கும் எழுத்திற்கும் இடையே இடம் விடுதல் கூடாது. ஒரு பத்திக்கும் மற்ருெரு பத்திக்கும் இடையே சிறிது அதிக இடம் விடுதல் வேண்டும். பத்தியின் முதல்வரியில் முதலில் சிறிது இடம்விட்டு எழுதுதல் வேண்டும்.

சொற்களேச் சேர்த்து எழுதவேண்டிய இடங்களில் சேர்த்தும், பிரித்து எழுத வேண்டிய இடங்களில் பிரித்தும் எழுதாவிட்டால் நாம் கருதிய பொருள் அதைப் படிப்பவருக்குத் தோன்றது.

(எ.டு.)

"சாத்தன் ஊருக்குப் போயிருக்கின்ருன் என்று எழுதின், சாத்தன் என்பவன் தன் ஊருக்குப் போயிருக்கின்ருன் என்று பொருள் வரும். அதனை சாத்தனுரருக்குப் போயிருக்கின்ருன் என்று சேர்த்து எழுதின், எவனே ஒருவன் சாத்தனூர் என்னும் ஊருக்குப் போயிருக்கின். ருன் என்று பொருள்படும். இராமன் பத்திரிகையைப் படித்தற்குக் கண்ணனிடம் கொடுத்தான்’ என்று சேர்த். தெழுதின், இடம் என்பது ஏழாம் வேற்றுமைப் பொருள் கொடுக்கும். அதனை, இராமன் பத்திரிகையைப் படித்தற்குக் கண்ணன் இடங் கொடுத்தான் என்று பிரித்தெழுதின் இடங்கொடுத்தான் என்பது ஒரு சொல் தன்மைப்பட்டுப் பொருள் வேறுபடும்.