பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 தமிழ் பயிற்றும் முறை

வேறு சில எடுத்துக்காட்டுகள் :

(அ) முக்கியமாக, பன்மையைக் குறிக்கும் கள்’ விகுதியைச் சொல்லோடு சேர்த்தே எழுதுதல் வேண்டும் ; பிரித்து எழுதுதல் கூடாது.

இந்தியப் பிரயாணிகள் சாப்பிடும் இடம் என்று எழுத வேண்டுவதனை, .

இந்தியப் பிரயாணி கள் சாப்பிடும் இடம் என்று பிரித்தெழுதின் அது மாருன பொருள் கொடுக்கும் என்பது புலனுகின்ற தன்ருே ?

(ஆ) தொகைநிலைச் சொற்களைச் சேர்த்தெழுதுதல் வேண்டும்.

மாவிலை சேவடி

நாவுரி கோவில்

பூவரசு கடைவாய் கொடிமரம் மிதியடி இடைவேளை பொரியுருண்டை

இவைபோல்வனவற்றைப் பிரித்தெழுதின் வேறு பொருள் தந்துவிடும்.

(இ) துணைவினைச் சொற்களைச் சேர்த்தெழுத வேண்டும்.

" அவர் கோவிலில் திருவலகிடுதல், திருவிளக்கேற்றுதல் முதலிய திருப்பணிகளைச் செய்துவந்தார் ’

செய்துவந்தார் என்று சேர்த்து எழுதின், ' நாள்தோறும் வழக்கமாகச் செய்தார்’ என்று பொருள்படும். அதனையே,

கோவிலில்.........செய்து வந்தார் என்று பிரித்தெழுதின், திருப்பணிகளைச் செய்துவிட்டு வெளியே வந்தார் என்று பொருள் பயக்கும். வந்தார்’ என்பது இங்குத் துணைவினையாகலின் சேர்த்தே எழுதுதல் வேண்டும்.