பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 379,

வண்ணுைெருவன் எதிரே வந்தான். இதில், வந்தான் என்பது துணைவினையன்று. .

(ஈ) முதல்’ என்பதையும் வரை' என்பதையும் முன் சொல்லோடு சேர்த்து எழுதவேண்டும்.

உச்சிமுதல் உள்ளங்கால்வரை அன்றுமுதல் இன்றுவரை (உ) தொட்டு மட்டும்’ என்ற சொற்களைச் சேர்த்தே எழுதவேண்டும்.

(எ-டு) தொன்றுதொட்டு '

அன்றுதொட்டு ' பால்மட்டும் பருகலாம் :

(ஊ) ஏழாம் வேற்றுமையுருபையும் ஐந்தாம் வேற்று மைச் சொல்லுருபினையும் சேர்த்தெழுதுதல் வேண்டும்.

பத்திரிகையைப் படிக்கக் கண்ணனிடம் கொடுத்தான்

மரத்திலிருந்து உதிர்ந்தது .

வீட்டிலிருந்து புறப்பட்டான் ’

(எ) சில இடங்களில் சுட்டுக்களைப் பிரித்தெழுதினுல்தான் பொருள் தெளிவாகும். அப்படிப்பட்ட இடங்களில் பிரித்தெழுதுதல் நன்று.

காணுமற்போன அப் பாற்பசுவைத் தேடிக்கண்டனர் ’ அக் கம்பத்தில் முட்டிக் கொண்டான்’.

இவ் விடங்களில் சுட்டுக்களைச் சேர்த்தெழுதுதல் தகாது. ஆயின்,

  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை ' என்பது போன்ற இடங்களில் சுட்டோடு சேர்ந்தெழுதுதல் வேண்டும்.

(ii) பொருளுக்கு அமைதியான சொற்கள் : வாக்கியங் களில் பொருளுக்கு அமைதியான சொற்களே அறிந்து: