பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 388

(3) எல்லா வுயிர்கட்கும் அருள்புரியும் பெரியோர்

யாண்டும் துன்புறுத்தப்படார்.’

இவ்வாறு செயப்பாட்டுவினை வாக்கியம் ஆக்கிக் கூறலாம்.

(4) உயிர்கட்கு அருள்புரியாதவர் துன்புறுவர். இவ்வாறு உடன்பாட்டு வாக்கியம் ஆக்கிக் கூறலாம்.

(5) எல்லா வுயிர்கட்கும் அருள் புரியும் பெரியோர்

யாண்டேனும் துன்புறுவரோ ? இவ்வாறு விளுவாக்கியமாக மாற்றலாம்.

(6) எல்லா வுயிர்கட்கும் அருள்புரியும் பெரியோர்

யாண்டுமே துன்புருர் !’ இவ்வாறு உணர்ச்சிவாக்கியம் ஆக்கலாம்.

(7) திருவள்ளுவர் கூறுகின்ருர் : எல்லா வுயிர்கட்கும் அருள்புரிபவர் யாண்டும் துன்புறுதல் இலர் . 8

இவ்வாறு நேர் கூற்று வாக்கியம் ஆக்கலாம்.

இங்ங்ணம் ஒரு வாக்கியத்தின் கருத்தைப் பலவித வாக்கியங்களில் அமைக்கும் பழக்கம் கைவரப்பெற்ருல் மொழிநடை திருந்தும்.

இப்பயிற்சிகளில் சிலவற்றின் துணையால் மொழி நயம், நடை நுட்பம் முதலியவற்றை மாணுக்கர்கள் உணரும்படி செய்யலாம் ; உணர்ச்சிகளைக் காணும்படியும் செய்யலாம். இம்மாதிரியான பலவகை மொழிப் பயிற்சிகளிளுல் மாணுக்கர்கள் தாம் எழுதும் கடிதங்களிலும் கட்டுரை களிலும், தம்முடைய உள்ளக்கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் தெளிவாகவும் அழுத்தமாகவும் வெளியிடும் திறனே அடைவர் என்பதற்கையமில்லை.

  • அல்லல் அருளால்வார்க்கில்லை” என்ற குறளை

அறிக. (குறள்-245)