பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கட்டுரைப் பயிற்சி

மனத்தில் தோன்றும் கருத்துக்களைக் கோவைப்படுமாறு காரண காரியத் தொடர்பில் அழகான மொழியில் அமைப்பது கட்டுரையாகும்; இயற்கையில் மனத்தில் தோன்றி எழும் எண்ணங்கள், மொழியைப் பொறுத்த வரையில், இரண்டு விதமாக வெளிப்படும். ஒன்று, வாய் மொழி : இரண்டு, எழுத்துமொழி. பேச்சில் வெளிப்படும் எண்ணங்கள் எழுத்து வடிவு பெருது நிலத்த தன்மையை அடைய இயலாது. அவை சிறந்தனவாய், கேட்க வாய்ப்பிராத பிறரும் படிக்கத் தக்கனவாய், என்றும் நிலத்த தன்மையை அடையத் தக்கனவாய் இருக்க வேண்டு மாளுல், அவை எழுத்து நிலையைப் பெறவேண்டும். எழுதி வைக்கும் பழக்கம் இல்லையேல், மனித நாகரிகம் இன்றிருப்பதுபோல சிறந்து வளர்ந்ே தாங்கி இருக்க முடியாது. எழுத்து மொழியால்தான் ஒருதலைமுறையின் அறிவுச் செல்வம் இன்னுெரு தலைமுறைக்குப் பயன்பட வாய்ப்பு ஏற்படுகின்றது.

வாய்மொழிக் கட்டுரையும் எழுத்துக் கட்டுரையும் : ஒரு பொருளைப்பற்றிய கருத்துக்களே நிரல்படப் பேச்சு மூலம் வெளியிடுவது வாய்மொழிக் கட்டுரையாகும்; அதையே எழுத்து மூலம் வெளியிடுவது எழுத்துக் கட்டுரையாகும். வாய்மொழிக் கட்டுரை எழுத்துக் கட்டுரைக்கு அடிப்படையாக அமையும். பள்ளிகளில் இருவிதக் கட்டுரை. களிலும் மானுக்கர்கள் நல்ல பயிற்சியினைப் பெறுதல்வேண்டும். தொடக்கநிலைப் பள்ளிகளில் வாய்மொழிக் கட்டுரைகள் மிகவும் இன்றியமையாதவை ; மேல் வகுப்புக்